சுற்றுலாத்துறை அபிவிருத்தி குறித்து சந்திப்பு


அப்துல்சலாம் யாசீம்-
திருகோணமலை மாவட்டத்தில் புல்மோட்டை,குச்சவௌி மற்றும் இறக்கக்கண்டி பகுதிகளில் சுற்றுலாத்துறையை முன்னேற்றுவது தொடர்பாக இன்று (17) குச்சவௌி பிரதேச சபைத்தலைவருக்கும் கிழக்கு மாகாண சுற்றுலாத்துறை பொது முகாமையாளருக்குமிடையில் சிநேகபூர்வமான சந்திப்பொன்று இடம் பெற்றது.

கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தில் நடைபெற்ற சர்வதேச ஆராய்ச்சி மாநாட்டு மண்டபத்திலேயே இச்சந்திப்பு இடம் பெற்றுள்ளது.
குச்சவௌி பிரதேச சபைத்தலைவர் ஏ.முபாரக் மற்றும் கிழக்கு மாகாண சுற்றுலாத்துறை பொது முகாமையாளர் ஏ.எஸ்.எம்.பாயிஸ் ஆகியோருக்குமிடையில் இடம் பெற்ற சந்திப்பின் போது அதிகளவில் சுற்றுலா பயணிகள் வரும் பிரதேசமாக குச்சவௌி பிரதேசமே காணப்படுகின்றது.
ஆனாலும் குச்சவௌி பிரதேசத்திலுள்ள இளைஞர்களுக்கு தொழில்வாய்ப்புக்கள் வழங்குவதில் அதிக கவனம் செலுத்துமாறும் இன்னும் சுற்றுலாத்துறையின் மூலம் பெறப்படுகின்ற வருமானத்தின் மூலம் குச்சவௌி பிரதேசத்தை முன்னேற்றுவதற்குறிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்தார்.
இதேவேளை கிழக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறை அபிவிருத்தி மூலம் வழங்கப்படுகின்ற அனைத்து விடயங்களிலும் குச்சவௌி பிரதேசத்தை உள்வாங்குவதாகவும் தொழில் வாய்ப்புக்களை வழங்குவதற்குறிய நடவடிக்கைகளை கிழக்கு மாகாண ஆளுநருடன் பேசி சில நியமனங்களை வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் சுற்றுலாத்துறை பொது முகாமையாளர் ஏ.எஸ்.எம்.பாயிஸ் இதன் போது குறிப்பிட்டார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -