இம்முறை புனித ஹஜ் கடமையினை நிறைவேற்றுவோருக்கான ஹஜ் வழிகாட்டல் நிகழ்வு நேற்று (30) மீராவோடை தாருஸ்ஸலாம் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியாவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு ஓட்டமாவடி, வாழைச்சேனை, மீராவோடை ஆகிய பகுதிகளிலிருந்து ஆண்கள் பெண்கள் என இருபாலாரும் கலந்து கொண்டிருந்தனர்.
ஹஜ் கடமையினை நிறைவேற்றும் முறை மற்றும் அதன் ஒழுங்குகள் போன்றவை வீடியோ காட்சிகளினூடாக காண்பிக்கப்பட்டு விளக்கமளிக்கப்பட்டது.
குறித்த இவ்வழிகாட்டல் நிகழ்ச்சியினை தியாவட்டவான் தாருஸ்ஸலாம் அரபுக் கல்லூரியின் அதிபர் மௌலவி எம்.பீ.எம். இஸ்மாயில் மதனி அவர்கள் நடாத்தியமை குறிப்பிடத்தக்கது.