101வது மாதிரிக் கிராமம் முல்லைத்தீவில் !!



அஷ்ரப் ஏ சமத்-
1980 தனது தந்தை பிரேமதாச ஆரம்பித்து வைத்த முல்லைத்தீவில் செல்வபுரம் வீடமைப்புக் கிராமத்தினை யுத்தத்தினால் அழிந்து இருந்ததை தனயன் சஜித் மீள நிர்மாணித்து ஆகஸ்ட்4ஆம் திகதி மக்களிடம் கையளிக்கவுள்ளாா்.
ஆகஸ்ட் 4ஆம் திகதி முல்லைத்தீவில் 101வது மாதிரிக் கிராமம் 05ஆம் திகதி மன்னாரிலும் நிர்மாணிக்கப்பட்ட 102வது கிராமம் - அமைச்சர் சஜித் பிரேமதாசாவினால் மக்களிடம் கையளிக்கப்படவுள்ளது.

முல்லைத்தீவு நகருக்கு அண்மையில் வட்டுவக்கல் நீர் நிலைக்கு அருகாமையில் அமைந்துள்ள சின்னத் தங்காடு எனப்படும் கிராமத்தில் தேர்தல் ஆண்டு நிறைவு வீடமைப்பு என 20 மற்றும் 10 வீடுகள் என 30 வீடுகள் கொண்ட தேர்தல் தொகுதி வீடமைப்பு
திட்டங்கள் இரண்டு; 1980.06.24ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டுள்ளது. அப்போதைய பாராளுமன்ற உறுப்பினரான செல்வதம்பு அவர்களினால் அப்போதைய பிரதம மந்திரியாக பதவி வகித்த ஆர்.ரணசிங்க பிரேமதாச அவர்கள் சார்பாக மக்களிடம் கையளிக்கப்பட்டது.

தமிழ் இனத்தை சேர்ந்த யுத்த வீரனான பண்டாரவன்னியன் இந்த திட்டத்திற்கு அண்மையில் அமைந்துள்ள ஒரு பாதுகாப்பு பதுங்கு குழியில் வசித்ததாக நம்பப்படுகிறது. இந்த வீரனின் பாதுகாப்பு பதுங்கு குழியின் சிதைவுகளை இன்றும் கூட முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் காரியாலயத்தின் வளாகத்தில் காணலாம்.


1980-1990 தசாப்தங்களில் இடம் பெற்ற கடுமையான யுத்தத்தின் போது இங்குள்ள வீடுகள் கடுமையாக சிதைவடைந்ததன் காரணமாக மக்கள் இடம் பெயர்ந்தனர். பின்னர் சுமார் இரண்டு தசாப்த காலமாக வீடுகளை நிர்மாணிப்பதற்கு அரசசார்பற்ற நிறுவனங்கள் ,சர்வதேச தொன்டர் நிறுவனங்கள் வீடமைப்பு
அபிவிருத்திகளுக்கு உதவி ஒத்தாசைகளை வழங்கினாலும் இந்த வீடமைப்புத் திட்டம் தேசியவிடமைப்பு அபிவிருத்தி அதிகார
சபையினால் நிர்மாணிக்கப்பட்ட ஒரு திட்டம் என்பதனால்
வீடமைப்பிற்காக எந்தவொரு பணமும் கிடைக்கவில்லை.
2017 டிசம்பர் 05 ஆம் திகதி முல்லைத்தீவு பிரதேசத்தில் "ஷில்ப சவிய" பயனாளிகளுக்கு அதன் நன்மைகளை வழங்குவதற்காக வருகைதந்த வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சரிடம் விடுக்கப்பட்ட ஓரு வேண்டுகோளிற்கு இணங்க இந்ததிட்டத்தின் களவிபரம் கண்டறியப்பட்டது.

இங்கு 1980 ஆண்டில் நிர்மாணிக்கப்பட்ட நினைவுப்படி கல் ஒன்றை பாதுகாப்பாக அவரது காணியில் புதைத்து பாதுகாப்பாக வைத்திருந்த ஒருவர் அதனை அமைச்சர் சஜித் பிரேமதாசாவிடம் பார்வைக்கு காண்பித்தார், 03 தசாப்தங்களுக்கு மேலாக அதனை பாதுகாத்து வைத்திருந்தது தொடர்பாக நன்றி தெரிவித்துக் கொண்ட அமைச்சர் அவர்கள் இங்குள்ள அனைத்து வீடுகளுக்கும் தலா ஐந்து இலட்சம் ரூபா நிதியுதவி வழங்கி அவற்றை புனரமைக்குமாறு தேசிய வீடமைப்பு அபிவிருதத்p அதிகார சபையின் தலைவர் எஸ்.பலன்சூரியவிடமும் முல்லைத்தீவு வீடமைப்பு மாவட்ட முகாமைமயாளருக்கும் கட்டளையிட்டர். ஆவ் வேண்டுகோளின் படி 2018.08.04 ஆம் திகதி 30 வீடுகள் கொண்ட 101ஆவது மாதிரிக் கிராமம் "செல்வபுரம்" மாதிரிக் கிராமம் அமைச்சர் சஜித்பி ரேமதாசாவினால் மக்களிடம் கையளிக்கப்படவுள்ளது.

அத்துடன் மன்னார் மாவட்டத்தில் நானாட்டான் நறுவிலிக்குளத்தில் நிர்;மாணிக்கப்பட்ட 102வது “லூர்துநகர்” மாதிரிக் கிராமத்தினையும் ஆகஸ்ட மாதம் 05ஆம் திகதி அமைச்சர் சஜித் பிரேமதாசாவினால் மக்களிடம் கையளிக்கப்படவுள்ளது. இந் நிகழ்வில் முல்லைத்தீவு மன்னார் மாவட்ட பாராளுமன்ற உறுப்பிணர்கள் வடக்கு முதலமைச்சர் மற்றும் வடக்கு ஆளுனரும் கலந்து கொள்ளவுள்ளனர்.






எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -