இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் இஷட்.எம் ஸாஜித்தின் முயற்சியினால் சாய்ந்தமருது ஜீ.எம்.எம்.எஸ் பாடசாலைக்கு நடைபாதை!



றியாத் ஏ. மஜீத்-
ம்பாறை மாவட்ட இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் இஸட்.எம்.ஸாஜித்தின் முயற்சியினால் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினதும் மக்களின் நிதிப் பங்களிப்புடனும்; துறுனு சிரம சக்தி மக்கள் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் சாய்ந்தமருது ஜீ.எம்.எம்.எஸ் பாடசாலையில் நிர்மாணிக்கப்பட்ட உள்ளக நடைபாதை கையளித்து வைக்கும் நிகழ்வு நேற்று (15) ஞாயிற்றுக்கிழமை பாடசாலை வளாகத்தில் இடம்பெற்றது. 

இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் இஸட்.எம்.ஸாஜித் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாவட்ட பிரதிப் பணிப்பாளர் எஸ்.எம்.ஏ. லத்தீப் பிரதம அதிதியாக கலந்து கொண்டு திறந்து வைத்தார். 

இந்நிழக்வில் கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.ஆர்.எம்.அஸீம், பாடசாலை அதிபர் யூ.எல். நசார், சாய்ந்தமருது பிரதேச செயலக இளைஞர் சேவைகள் அதிகாரி எம்.ரீ.எம்.ஹாறூன், முன்னாள் கொழும்பு பல்கலைக்கழக முன்னாள் விரிவுரையாளர் எம்.ஐ.எம். சதாத், ஆசிரியர் ஏ.எல. ஜவாஹிர்,யூத் எலைன்ஸ் தவிசாளர் ஜே.பஸ்ரி, ஜீனியஸ்7 கழகத்தின் செயலாளர் எம்.எம்.எம்.றினாஸ், சாய்ந்தமருது இளைஞர் சம்மேளனத்தின் உறுப்பினர்களான சஸ்பாக் அஹமட், ஆதிப் ஆரிபின், யூத் எலைன்ஸ் உறுப்பினர்களான ஜே.எம். ஆக்கீல், எம்.றிபாத், எம். நப்சன் மற்றும் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார நடவடிக்கை அமைச்சு, தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் இலங்கை இளைஞர் பாராளுன்றம் என்பன இணைந்து இக்கருத்திட்டத்தை மேற்கொண்டன. இக்கருத்திட்டத்தின் நிர்மாணப் பணிக்கு தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாவினையும் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் இஸட்.எம்.ஸாஜித்தின் முயற்சியினால் மக்கள் பங்களிப்பு நன்கொடையாக 2 லட்சம் ரூபாவினையும் பெற்று செய்து முடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -