!!.(சிந்திக்க தூண்டும் வீடியோ) ஆரசியலில் நீண்ட நண்பனும் கிடையாது. பகைவனும் கிடையாது.. அரசியல் என்பது கலையின் ஒரு பிரிவு என்ற வரம்பிற்குள் அரசியல் செய்தால் மிகவும் எளிதாக சாதித்து விடலாம்.. அமீர் அலி எதிர் ஹிஸ்புல்லாஹ்.!!



ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்-
டந்த 2015ம் ஆண்டைய பாராளுமன்ற தேர்தலுக்கு முற்பாடு தற்போதைய இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் மற்றும் பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி ஆகியோர் எனக்கு வழங்கிய நேர்காணலின் பொழுது மட்டக்களப்பு மாவட்ட பிரதேசங்களின் அபிவிருத்திகள் மற்றும் ஏனைய அரசியல் நடவடிக்கைகள் சம்பந்தமாக மிகவும் பாரதூரமாக ஒருவரை ஒருவர் விமர்சித்திருந்தார்கள். இன்று இருவரும் வெவ்வேறு அரசியல் கட்சிகளை பிரதி நித்துவப்படுத்தினாலும் மாவட்டத்தில் ஓர் இணக்கப்பாட்டு அரசியலினையே மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கு கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு பிற்பாடு ஓட்டமாவடி பிரதேச சபையினை அமீர் அலி தரப்பு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசிற்கு எதிராக ஆட்சி அமைப்பதற்கு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாவின் பாரிய ஒத்துளைப்பு இன்றி அமையாத ஒன்றாக காணப்பட்டது. ஆகவே இவ்வாறான விடயங்கள் அரசியலில் நீண்ட கால நண்பனும் கிடையாது. பகைவனும் கிடையாது என்பதற்கு மிக சிறந்த உதாரணமாக அமைந்துள்ளது. அது மட்டுமல்லாமல் தற்பொழுது மட்டக்களப்பு மவட்ட அரசியலிலும் இருவருடைய அரசியல் காய் நகர்த்தல்களும் ஏனைய நடவடிக்கைகளும் குறித்த உதாரணத்திற்கு மேலும் வலுச்சேர்க்கும் விடயமாகவே பார்க்கப்படுகின்றது.

அந்த வகையில் ஒட்டு மொத்தமாக இவ்வாறான அரசியல் நடவடிக்கைகளை பார்க்கின்ற பொழுது…. அரசியல் என்பது கலை எனும் மிக பிரமாண்டமான படைப்பிற்குள் இருக்கும் இசை, நாடகம், சட்டம்,Logic,Cinema (சினிமா), நடனம் போன்றவைகளை போன்று ஒரு பிரிவாகும். ஆகவே பெரும்பான்மை சமூகமாக வாழும் சிங்கள சமூகத்தினை கொண்ட இலங்கை எனும் எமது ஜன நாயக நாட்டில் அரசியலை கலையின் ஒரு பிரிவாக நினைத்து அதனுடன் சேர்ந்த சகல நடவடிக்கைகளையும் மேற் கொண்டால் அரசியலுக்கு வருவதற்கு முன்னர் எமக்கு இருந்த தூர நோக்கு அடைவுகள் அதனுடன் சேர்ந்த சிந்தனைகள் அனைத்தையும் மிக இலகுவில் சாதித்து விடலாம் என்பதே இந்த இருவருடைய நேர்காணலில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்களின் காணொளி எமக்கு உணர்த்தும் விடயமாக இருக்கின்றது…

எனவே இணைய நாளிதழ் வாசகர்களின் சிந்தனைக்காக காணொளி இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
வீடியோ –
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -