மருதூரின் முதுசொம் ஒன்றுக்கு “மருதூர் நிவாரணி” விருது!!!

எம்.வை.அமீர் -
செஸ்டோ எனப்படும் ஸஹிரியன் கல்வி மற்றும் சமூக அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் கடந்த 2018-07-22 ஆம் திகதி கல்முனை சாஹிறா கல்லூரி எம்.எஸ்.காரியப்பர் மண்டபத்தில் இடம்பெற்ற எம்.சி.எம்.கமருர் ரிழா எழுதிய இலங்கையின் கிழக்கு மாகாணத்துக்குரிய கிராமிய வட்டார வழக்குச் சொற்கள் அடங்கிய ‘மண் வாசனை’ என்ற நூல் வெளியீட்டின்போது “வாழும்போது வாழ்த்துவோம்” என்ற வாசகத்தின்கீழ் 53 வருடகாலமாக வைத்தியத்துறையில் சிறந்து விளங்கிய சித்த ஆயுர்வேத வைத்தியர் சாஹுல் ஹமீட் முகம்மட் தம்பி அவர்கள் பொன்னாடை போர்த்தி “மருதூர் நிவாரணி” என்ற விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

1928-09-13 ஆம் திகதி சாய்ந்தமருதூரில் பிறந்து, 1965 ஆம் ஆண்டு முதல் சித்த ஆயுர்வேத வைத்தியத்துறையில் காலடி வைத்து சுமார் 53 வருடங்களாக, 90 வயதையும் தாண்டிய நிலையில் உத்வேகத்துடன் பொன்னாங்கனி தைலம், தாழம்பூ தைலம், ஆயுர்வேத வைத்தியம், வாதம், கடுப்பு, சுளுக்குவாதம், சுவாதம் சம்மந்தமான பெண்களுக்கான நோய்கள், கர்ப்பம் தரிக்காத பெண்களுக்கான சிகிச்சைகள், பேய், பிசாசுக்குரிய அரேபிய முறை சிகிச்சை, தீராத நோய்களுக்கான குர்ஆன் முறையிலான சிகிச்சை, வயிற்று நோய்களுக்கான சிகிச்சை போன்றவற்றில் பிராந்தியத்தில் பிரபல்யமிக்க சித்த ஆயுர்வேத வைத்தியர் சாஹுல் ஹமீட் முகம்மட் தம்பி அவர்கள் 10501 என்ற பதிவு இலக்கத்துடன் தனது வைத்தியப்பணியை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -