மில்கோ நிறுவனத்தின் செயற்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து கொட்டகலையில் ஆர்ப்பாட்டம்

க.கிஷாந்தன்-கொட்டகலையில் அமைந்துள்ள மில்கோ நிறுவனத்தின் செயற்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து கொட்டகலை பிரதேச பால் உற்ற்பத்தியாளர்களானகால்நடை வளர்ப்பாளர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
இந்த போராட்டம் கொட்டக்கலை மில்கோ பசும்பால் சேகரித்து பதணிடும் நிறுவனத்தின் வளாகத்தில் 02.05.2018 அன்று மதியம் முன்னெடுக்கப்பட்டது.

இதில் இப்பிரதேசத்தை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்கள் கலந்துகொண்டு போராட்டத்தை முன்னெடுத்தனர்.

கொட்டகலை பிரதேசத்தில் கால்நடை வளர்பாளர்கள் தாம் தினமும் சேகரிக்கும் பசும்பாலை மில்கோ நிறுவனத்திற்கே வழங்கி வருகின்றனர்.

இவ்வாறு வழங்கப்படும் ஒரு லீட்டர் பாலுக்கு அதன் தரத்திற்கேற்ப 54 ரூபாய் முதல் 60 ரூபாய் வரையிலான தொகையை மில்கோ நிறுவனம் மாதம்இருமுறை வழங்கி வந்துள்ளது.

இருந்த போதிலும் நல்லாட்சி அரசாங்கம் ஆரம்பித்த காலம் தொட்டு வழங்கப்பட்டது. பசும்பாலூக்கு இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை அதாவது 15நாளுக்குறிய பணத்தை வழங்கிய வருகின்றனர்.

இதனால் கால்நடைகளை பராமரிப்பதற்காக புண்ணாக்கு மற்றும் ஏனைய சத்துணவுகளை பெற்றுகொள்வதில் சிரமத்தை எதிர்கொண்டு வருவதால்மில்கோ நிறுவனத்தின் இந்த செயல்பாட்டை எதிர்த்து போராட்டத்தில் ஈடுப்பட்டதாக போராட்டவாதிகள் தெரிவித்தனர் .

அதேவேளை ஒரு மூட்டை புண்ணாக்கின் விலை மூவாயிரம் தொடக்கம் நான்காயிரம் ரூபாய் வரை வாங்கி வருவதாகவும் பணமில்லாத காரணத்தால்தனியார் கடைகளில் கடனுக்கு வாங்க வேண்டிய நிலையில் பாரிய கடன் சுமைக்கும் தாம் ஆளாகி வருவதாகவும் பால் உற்பத்தியாளர்கள் சுட்டிக்காட்டினர்.

எனவே பால் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள கொட்டகலை பிரதேச மக்களின் நலனை கருத்திற்கொண்டு பாலுக்கான முறையாக பணம் வழங்கவும், முறையாககால்நடை வளர்ப்பை ஊக்கப்படுத்தவும் அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் எனவும் கோரிக்கையும் இதன்போது விடுக்கப்பட்டது.



எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -