மட்டக்களப்பு புகையிரத நிலையத்திற்கு புதிய பிரதான புகையிரத நிலைய அதிபராக ஆறுமுகம் வசந்தகுமார் நியமனம்.


பழுலுல்லாஹ் பர்ஹான்-

ட்டக்களப்பைச் சேர்ந்த ஆறுமுகம் வசந்தகுமார் மட்டக்களப்பு புகையிரத நிலையத்தின் புதிய பிரதான புகையிரத நிலைய அதிபராக நேற்று 27 செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு புகையிரத நிலையத்திலுள்ள பிரதான புகையிரத நிலைய அதிபர் காரியாலயத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

இலங்கை புகையிரத திணைக்களத்தில் 35வருடங்களாக புகையிரத நிலைய அதிபராக கடமையாற்றிவந்த நிலையிலே இவர் இவ் உயர்பதவியுயர்வை பெற்றுள்ளார்.

சிறந்த சமூக சேவையாளரும்,அகில இலங்கை சமாதான நீதவானுமான இவர் அமரர்களான ஆறுமுகம் மகேஸ்வரி தம்பதிகளின் புதல்வரும்,ஒய்வு பெற்ற மாவட்ட செயலாளரின் பிரத்தியேக உதவியாளர் திரு சாம்பசிவம் ஜேபி,அமரர் கனகம்மா ஆகியோரின் மருமகனும் திருமதி .சிவரஞ்சினியின் கணவரும்,கொக்கட்டிச்சோலை பிரதேச அரச கால்நடை வைத்திய அதிகாரி டாக்டர் டுஜித்திரா லிங்கேஸ்வரன் மற்றும் சீலோம் தனியார் மருத்துவமனை தாதிய உத்தியோகத்தர் பவித்திரன் ஆகியோரின் தந்தையும் ,மட்டக்களப்பு வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பட்டைய பொறியியலாளர் ஏ.லிங்கேஸ்வரனின் மாமனாரும், செல்வி எல்.ஹரிகா ஹர்ஷியின் அம்மப்பாவும் ஆவார்.

மட்டக்களப்பு புகையிரத நிலையத்தின் பிரதான புகையிரத நிலைய அதிபராக கடமையாற்றி நேற்று 27ம் திகதியுடன் ஓய்வு பெற்றுச் சென்ற பிரதான புகையிரத நிலைய அதிபர் எம்.பீ.ஏ.கபூரின் பதவி வெற்றிடத்திற்கே புதிய பிரதான புகையிரத நிலைய அதிபராக ஆறுமுகம் வசந்தகுமார் இலங்கை புகையிரத திணைக்களத்தினால் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -