ஹஸ்பர் ஏ ஹலீம்-
கிண்ணியா நகர சபையில் பெரியாற்று முனை வட்டாரத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் மயில் சின்னத்தில் போட்டியிடும் நிஸார்தீன் முஹம்மட் அவர்களை ஆதரித்தும் மக்களுடனான சந்திப்பும் நேற்று(03) பெரியாற்று முனைப் பகுதியில் இடம்பெற்றது இதன் போது கட்சியின் பெரியாற்று முனை வட்டார கிளையும் அகில மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் வர்த்தக வாணிப கைத்தொழில் அமைச்சருமான றிசாத் பதியூதினால் திறந்து வைக்கப்பட்டது.இவ் நிகழ்வில் கட்சியின் தேசிய அமைப்பாளரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான அப்துல்லா மஹ்ரூப் உட்பட கிண்ணியா நகர சபையின் முன்னால் தவிசாளர் டாக்டர் ஹில்மி மஹ்ரூப் மற்றும் பெரியாற்று முனை வட்டார வேட்பாளர் நிஸார்தீன் முஹம்மட் அவர்களின் ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர்..

