கிழக்கில் வீதிகளை புணரமைக்கத்திட்டம்


அப்துல்சலாம் யாசீம்-
கிழக்கு மாகாணத்திலுள்ள வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு கீழ் உள்ள வீதிகளை புணரமைப்பு செய்வது தொடர்பான கலந்துறையாடல் (15) கிழக்கு மாகாண ஆளுனர் செயலகத்தில்
ஆளுநர் ரோஹித போகொல்லாகம தலைமையில் நடைபெற்றது.

கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மட்டக்களப்பு திருகோணமலை மாவட்டங்களிலுள்ள மிக முக்கிய வீதிகள் புணரமைக்கப்படவுள்ளதாகவும் அவ்வீதிகளை மிக விரைவாக புணரமைக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த வாரம் கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்த வேளை தெரிவித்ததாகவும் ஆளுநர் தெரிவித்தார்.
இதனடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏ 15 வீதி சீரமைப்பு ,மட்டக்களப்பு திருகோணமலை வீதி பாலம் மீள் புணரமைப்பு,செங்கலடி தொடக்கம் மஹாஓயா வீதி புணரமைப்பு மட்டக்களப்பு நகரத்திலுள்ள வௌிச்சவீடு வீதியினை அகலமாக்குதல், பட்டி வீதி தொடக்கம் மாமாங்கம் கோயில் வீதியினை அகலப்படுத்தல், களுதாவளை கடல் வீதியிலிருந்து பொருளாதார நிலையம் வரையிலான வீதியை அகலமாக்கல் போன்ற பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதுடன்
திருகோணமலை மாவட்டத்தில் திருகோணமலை புல்மோட்டை வீதி பாலம் புணரமைப்பு, கப்பல்துறை வரோதயநகர் வீதியை அகலப்படுத்தல்,மட்டக்களப்பு திருகோணமலை வீதி கிண்ணியா வரை அகலமாக்குதல், சம்பூர் கூனித்தீவு தொடக்கம் சூரங்குடா வீதியினை புணரமைப்பு செய்தல் , உப்புவௌி வரோதயநகர் மற்றும் உவர்மலை வீதிகளை புணரமைத்தல் செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டத்தில் பொத்துவில் நகரத்திலிருந்து அருகம்பை வரையான வீதியினை அகலமாக்குதல், சம்மாந்துறை நகர வீதியினை அகலமாக்குதல், அக்கறைப்பற்று எம்.சீ வீதியை அகலப்படுத்தல் இதேவேளை தமண வீதியை புணரமைத்தல் தொடர்பாகவும் கலந்துறையாடல் இடம் பெற்றது.
அத்துடன் கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து வீதிகளையும் தரமான வீதிகளாக புணரமைக்க திட்டமிட்டுள்ளதாகவும் கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம இதன் போது தெரிவித்தார்.


இக்கலந்துறையாடலில் வீதி அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள். கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் செயலாளர் கே.முருகானந்தம் கிழக்கு ஆளுநர் செயலாளர் அசங்க அபேவர்தன மற்றும் வீதி அபிவிருத்தி திணைக்கள பொறியியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.






எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -