முர்ஷிட்-
ஜனாதிபதியுமான மைத்ரிபால சிறிசேனவின் புதல்வி சதுரிக்கா சிறிசேன ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கல்குடா தொகுதிக்கான அமைப்பாளரின் மக்கள் தொடர்புக் காரியாலயத்தை வியாழக்கிழமை திறந்து வைத்தார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கல்குடா தொகுதிக்கான அமைப்பாளர் மௌலவி எம்.எம்.எஸ்.ஹாறூன் ஸஹ்வி அழைப்பினை ஏற்று சதுரிக்கா சிறிசேன ஒட்டமாவடிக்கு வருகை தந்தார்.
இதன் போது மக்கள் தொடர்புக் காரியாலயத்தை திறந்து வைத்ததோடு, அல் கிம்மா நிறுவனத்தினையும் பார்வையிட்டதுடன், எல்லை வீதி மீராவோடையில் உள்ள அந்நூர் கேட்போர் கூடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மகளிருக்கான சந்திப்பில் கலந்து கொண்டார்.
