இலங்கை முஸ்லீம்கள் வாழ்வதற்கு பாதுகாப்பற்ற நாடு என்ற அறிக்கையை அம்பாறை சம்பவமுருதிப்படுத்துகின்றதா?-பைசால் காசீம்




Umar Ali Mohamed Ismail-
ம்பாறை தாக்குத சம்பவங்களை கண்டித்து பைசால் காசீம் அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் பின்வருமாறு இன்று 27/2/2018 செவ்வாய்க்கிழமை நள்ளிரவு அம்பாறை நகரில் முஸ்லிம்களின் வணக்கஸ்தலமான பள்ளிவாசலினையும் முஸ்லீம்களின் வர்த்தக நிலையத்தினையும் திட்டமிட்டு தாக்கி, தீயிட்டிருக்கின்றார்கள்,வர்த்தக நடவடிக்கைகளுக்காக வந்திருந்த எமது உடன்பிறப்புக்கள் மீது தாக்குதல் நடாத்தி அவர்களது வாகனங்களையும் தீயிட்டிருக்கின்றார்கள்,செய்தி கேள்வியுற்றதும் மிக்கவும் மன்வேதனையடைந்தேன் .இந்த மிலேச்சத்தனமான செய்கையை இம்மக்களின் பிரதிநிதி என்ற வகையில் மிகவும் வன்மையாக கண்டிக்கின்றேன்,எமது மாவட்டத்தில் வாழும் மக்கள் அன்னியோன்யமாக இருப்பதை குலைப்பதற்காக திட்டமிடப்பட்ட முறையில் அரங்கேற்றப்பட்டு வருகின்ற தொடர்ந்தேச்சையான செயல்களின் ஒரு அங்கமாகவே நான் இதனை கருதுகின்றேன்.

முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வாழும் இம்மாவட்டத்தில் முஸ்லீம்கள் மீது இவ்வாறான இழிசெயல்களை புரிவது ஏற்றுக்கொள்ளமுடியாத ஒருவிடையமாகும்.பிரதம மந்திரி அவர்கள் சட்டமும் ஒழுங்கும் அமைச்சினை பாரம் எடுத்து கடமையினை கூட இன்னும் பொறுப்பெடுக்கவில்லை ,இந்நிலையில் இவ்விடையம் கேள்விப்பட்டதும் உடனடியாக பிரதம மந்திரியுடனும்,அம்பாறைக்கு பொறுப்பான பிரதி போலீஸ் மா அதிபர்,அரசாங்க அதிபர்,பிரதம போலீஸ் அத்தியட்சகர் உட்பட அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபருடனும் உடனடியாக தொடர்புகொண்டேன்.அவர்கள் குறித்த அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு உடன் நடவடிக்கை எடுக்குமாறு பணித்தனர்.இருப்பினும் போலீசார் ,விசேட அதிரடிப்படையினர் குறித்த இடத்திற்கு வருவதற்கு முன்னரே சம்பவங்கள் நடந்து முடிந்துவிட்டன.

இந்த சம்பவத்தை இட்டு நாம் ஒருபோதும் மௌனித்திருக்க மாட்டோம்,இச்சம்பவத்தின் சூத்திரதாரிகளை நவீன தடயவியல் சான்றுகளின் அடிப்படையில் உடனடியாக கண்டுபிடிக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றோம்.,அத்துடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு போதுமான அளவு நஷ்டஈடு வழங்கப்படுவதுடன்,அரசு அரச செலவிலேயே சேதமாக்கப்பட்ட பள்ளிவாசலினை புனரமைக்க வேண்டும் என்று அரசிடம் கேட்டுக்கொள்கின்றோம்.

இதன்பிறகு இவ்வாறான சம்பவங்கள் இந்த மாவட்டத்தில் மட்டுமல்ல,இலங்கையின் வேறு எவ்விடத்திலாவது நடக்காதவண்ணம் அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

அப்பாவி பௌத்தர்களிடம் முஸ்லீம்கள் பற்றிய தப்பபிப்பிராயங்களை இனவாதிகள் பரப்பியிருக்கின்றார்கள்,அவற்றின் விளைவாகவே இவ்வாறான அசம்பாவிதங்கள் நடைபெற்றுவருகின்றன.

அண்மையில் சருவதேச நிறுவனம் ஒன்று இலங்கை முஸ்லீம்கள் வாழ்வதற்கு பாதுகாப்பற்ற நாடுகளுள் இடம்பிடித்துள்ளதாக குறிப்பிட்டிருக்கின்றது.இதுபோன்றதும் இதற்குமுன்னர் முஸ்லீம்கள் மீது நடைபெற்றிருக்கும் தாக்குதல்களும் இவ்வாறான ஆய்வு முடிவுகளுக்கு வலுச்சேர்ப்பதாக கருதமுடியும்.
பொதுமக்கள் இவ்விடையம் சம்மந்தமாக குழப்பமடையாமல் இருப்பதுடன் இஸ்லாம் கூறுகின்ற சகோதரத்துவ மனப்பாண்மையுடன் பொறுமை காக்குமாறு வேண்டிக்கொள்கின்றேன்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -