ஹஸ்பர் ஏ ஹலீம்-
தி/நிலாவெளி முஸ்லீம் மகாவித்தியாலய அதிபர் ஜே.எம்.சமீம் அவர்களின் ஆறு வருட சேவையை பாராட்டி நேற்று(01) பொன்னாடை போர்த்தி பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினால் கௌரவிக்கப்பட்டது..இறுதி நாளான நேற்று நடைபெற்ற இல்ல விளையாட்டுப் போட்டியின்போதே பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் செயலாளர் எஸ்.ஏ.கடாபியினால் இப்பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது..இவ் திகழ்வில் பிரதம விருந்தினராக திருகோணமலை வலயக் கல்விப் பணிப்பாளர் திரு.விஜேந்திரன்,குச்சவெளி கோட்டக்கல்வி அதிகாரி திரு.மதியழகன் உள்ளிட்ட பெற்றார்கள் ,ஆசிரியர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்