கல்முனை வாட்டாரம் 2 ல் இரண்டு வக்கீல்கள் பலத்த போட்டி! அரசியலில் மருதமுனை முன்மாதரி!



M.M.நிலாம்டீன்-    
ல்முனை மாநகர தேர்தலில் மருதமுனையில் இருந்து கல்முனை வட்டாரம் 2 க்கான தேர்தல் களத்தில் இரண்டு வக்கீல்கள் பலத்த போட்டியில் உள்ளார்கள்.அங்கு முஸ்லிம் காங்கிரஸ் கட்சி சார்பாக சிரேஸ்ட வக்கீல் றகீப் மற்றும் ரகுமானின் NFFG கட்சியில் இருந்து இளம் வக்கீல் அசாம் ஆகியோர் களத்தில் போட்டியில் உள்ளனர்.

மருதமுனை கல்வியில் முன்னணி கிராமம் என்பதால் அங்கு படித்தவர்கள் அரசியலுக்குள் வரவேற்கப்படுகின்றார்கள்.அந்த வகையில் வட்டாரம் 2 ல் இந்த வக்கீல்கள் இருவரும் போட்டியில் நிற்பது வரவேற்கப்படும் விடயம்தான்.

ஒரு மாநகர உறுப்பினர் பதவிக்கு இரண்டு வக்கீல்கள் போட்டியிடுவது ஜனநாயகத்தின் உச்ச கட்டம்.காரணம் அரசியல் சாக்கடை என்று படித்தவர்கள் ஒதுங்குவதால் சகல வகைகளிலும் தரம் குறைந்தவர்கள் அரசியலில் ஆதிக்கம் செலுத்துவது தவிர்க்க முடியாத ஒன்றுதான் .இப்படியாக படித்தவர்கள் அரசியலுக்குள் முன்னணி வகித்தால் தரம் குறைந்தர்வர்கள் ஓரம் கட்டப்படுவார்ர்கள்.

மருதமுனையின் இந்த முன்மாதரி முழு முஸ்லிம் சமுகத்திற்க்கும் ஒரு எடுத்தக் காட்டாக அமைய வேண்டும். அரசியல் சாக்கடை அல்ல.அரசியலுக்கு அர்த்தம் அல்லாத கயவர்கள் வந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றார்கள் .

அதனால் படித்தவர்கள் சமுகத்தில் அந்தஸ்தில் உள்ளவர்கள் மருதமுனை முன்மாதரி போன்று முன்வரவேண்டும். மருதமுனையின் இந்த முன்மாதரி நாடு முழுவதும் பரவட்டும்..



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -