காரைதீவு நிருபர் சகா-
கல்முனை மாநகரசபைக்குட்பட்ட கல்முனை 2ஆம் 3ஆம் பிரிவுகளுக்கு மத்தியில் கோவில் வீதியூடாகச் செல்லும் மதகுஒன்றினூடாக கழிவுநீர் வெளியேறி சூழலை அசுத்தமாக்கிவருகிறதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
மண்ணைச்சுத்தப்படுத்தி விற்கும் ஒரு வியாபாரத்தின் ஓரங்கமாகவே இக்கழிவுநீர் வெளியேறி வருவதாக அந்த மக்கள் பிரபல சமுகசேவையாளரான சந்திரசேகரம் ராஜனிடம் முறையிட்டுள்ளனர்.
அவரிடம்கேட்டபோது:
நான் அந்த இடத்தைச் சென்றுபார்த்தேன். ஆற்றுமண்ணை அசுத்தமான மண்ணை கழுவிச்சுத்தப்படுத்தும் செயற்பாட்டின்போது கழிவுநீர் வெளியேறிவருகின்றது.
இது தொடர்பாக எழுத்துமூலம் கல்முனை பிரதேச செயலாளர் கல்முனை மாகநரசபை ஆகியவற்றுக்கு முறைப்பாடு கொடுத்துள்ளேன்.
இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. விரைவில் வெகுஜனப் போராட்டமொன்றை முன்னெடுக்கவேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளோம். என்றார்.
இக்கழிவுநீர் தேங்கி நிற்கும் இடமானது அருகருகாக ஒரு கோவில் ஒரு பள்ளிவாசல் ஒரு மைதானமுள்ள கடற்கரைச்சூழல் என்பதும் இவ்வண் குறிப்பிடத்தக்கது.
எனவே இதுவிடயத்தில் கல்முனை மாகநரசபை நிரவாகம் உரிய நடவடிக்கை எடுக்குமா? என்பது மக்களின் கோரிக்கையாகும்.


