நடைபெறும் உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் வன்னி மாவட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை வெற்றிபெறச் செய்வதற்காக சூறாவளிப் பிரச்சாரத்தில் எம்.பி மஸ்தான் ஈடுபட்டுள்ளார்.
இன்று தனது அணியினருடன் முல்லைத்தீவு துணுக்காய் பிரதேச சபை பிரிவுக்குட்பட்ட பல்வேறு வட்டாரங்களில் தேர்தல் அலுவலகங்களை திறந்து வைத்ததுடன் மக்கள் சந்திப்புக்களையும் மேற்கொண்டார். தவிரவும் இன்று தனது ஆதரவாளர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பல்வேறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிரச்சாரக் கூட்டங்களிலும் தொடர்ச்சியாக உரையாற்றி வருகிறார்.
பாண்டியன் குளம் பிரதேச சபை பிரிவு அம்மாள்புர கிராமம் வட்டாரம் 2ல் போட்டியிடும் குணசீலன்,
துணுக்காய் வட்டாரத்தில் போட்டியிடும் நகுலேசன் மற்றும் கிருஷ்ணராஜ்,துணுக்காய் பிரதேச சபை அம்பளப்பெருமாள் பகுதி வேட்பாளர் துரைரெட்ணம் விஜயகாந்த், மற்றும் ஸ்ரீ பிரியா ஆகியோரின் பிரச்சாரக் கூட்டங்களில் உரையாற்றிய கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் மஸ்தான் காதர் இந்தத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்வதன் மூலம் எமது இந்தப் பிரதேசத்தினை சிறந்த முறையில் அபிவிருத்தி செய்து முன்னேற்றமடையச் செய்ய முடியும் எனக் குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறியதாவது எமது வன்னி மாவட்டம் அபிவிருத்தியில் பாரிய பின்னடைவில் இருப்பதற்கு அடிப்படைக் காரணம் அரசியல் அதிகாரமின்மையே என்பதில் நாம் தெளிவாக இருக்க வேண்டும்.