நாடாளுமன்றில், பிரதமரின் நடவடிக்கை கண்டிக்கப்பட வேண்டியது – ரிஷி செந்தில்ராஜ்



நாடாளுமன்றில், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் நடவடிக்கை கண்டிக்கப்பட வேண்டியது என மலையக தேசிய முன்னணியின் தலைவரும், கூட்டு எதிர்க்கட்சியின் தமிழ்ப் பிரிவு பொறுப்பாளருமான கலாநிதி ரிஷி செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் அண்மையில் நாடாளுமன்ற அமர்வுகளின் போது பிரதமர் நடந்து கொண்ட விதம் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஊடக அறிக்கை ஒன்றின் மூலம் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஜனநாயகத்தின் அதி உன்னத மையமாகக் கருதப்படும் நாடாளுமன்றிற்குள் பிரதமர் நடந்து கொண்ட விதம் வரலாற்றில் கறை படிந்த அத்தியாயமாக மாறியுள்ளது.

இலங்கை நாடாளுமன்ற வரலாற்றில் எந்தவொரு பிரதமரும் இவ்வாறான ஓர் நடத்தையை அமர்வுகளின் போது வெளிக்காட்டவில்லை.
நல்லாட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு கடந்த காலங்களில் ஒத்துழைப்பு வழங்கியமைக்காக மலையக தேசிய முன்னணி வருந்துகின்றது.
ஊழல் மோசடிகளை இல்லாழிப்பதாகவும் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதாகவும் தேர்தல் காலத்தில் தம்பட்டம் அடித்துக்கொண்ட பிரதமர், நாடாளுமன்றில் திருடன் திருடன் எனக் கூச்சலிட்டு அவையின் உன்னத தன்மைக்கு களங்கம் கற்பித்துள்ளார்.
இவ்வாறான செயற்பாடுகள் உள்நாட்டில் மட்டுமன்றி சர்வதேச அளவிலும் நாட்டுக்கு பாதக நிலையையே உருவாக்கும் என்பதனை பிரதமர் நினைவில்கொள்ள வேண்டும்.

பூரணமான ஜனநாயக வழிமுறைகளை பின்பற்றி வரும் மலையக தேசிய முன்னணி கட்சியின் சார்பிலும், கூட்டு எதிர்க்கட்சியின் தமிழ்ப் பிரிவின் சார்பிலும் பிரதமரின் நடவடிக்கைக்கு கண்டனத்தை வெளியிட்டுக் கொள்வதாக கலாநிதி ரிஷி செந்தில்ராஜ் தனது ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -