மூதூர் தொகுதிக்குற்பட்ட கிண்ணியா நகர சபை , கிண்ணியா பிரதேச சபை.மூதூர் பிரதேச சபை மற்றும் தம்பலகாம பிரதேச சபைகளிள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களுடான விசேட கலந்துரையாடல்
ஒன்று கிண்ணியா விஷன் நிறுவனத்தின் கேட்போர் கூடத்தில் இன்று (13) ஞாயிற்றுக்கிழமை இடமபெற்றது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூதூர்தொகுதி அமைப்பாளரும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான நஜீப் அப்துல் மஜீத் தலைமையில் இடம பெற்ற இக்கலந்துறையாடலில்
முன்னாள் வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.ஏ.குத்தூஸ் சிரேட்ஷ சட்டத்தரணியும்சுதந்திரக் கட்சியின் செயற்பாட்டாளருமான ஏ.டப்ளியூ. சதாத் விஷன் நிருவாகப் பணிப்பாளர ;
ஏ.ஆர்.எம். சைபுள்ளா மற்றும் நான்கு பிரதேச சபைகளில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் உட்பட கட்சியின் ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர்.


