தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுகள் கடந்த சில தினங்களாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழுவினருக்கும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையிலான குழுவினருக்குமிடையில் நடைபெற்று வருகின்றன.
வடக்கு, கிழக்கில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்தே போட்டியிடவேண்டுமென கட்சிக்குள் பெரும்பாலானோர் கோரிக்கை விடுத்துவரும் அதேசமயம், மறுபுறம் முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கிழக்கில் போட்டியிடவேண்டுமென ஐ.தே.க. தலைமை வலியுறுத்தி வருவதாகத் தெரியவருகிறது.
ஆனால், ஐக்கிய தேசியக் கட்சியில் இருக்கும் கிழக்கு மாகாண முக்கியஸ்தர்களான தயாரட்ன மற்றும் அமைச்சர் தயா கமகே உட்பட்டோர் கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் காங்கிரஸை உள்ளீர்க்கும் செயற்பாடுகளைச் செய்துவிடக்கூடாதென்று கட்சித் தலைமையைக் கேட்டிருப்பதாக அறியமுடிகின்றது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு கிழக்கில் முஸ்லிம்கள் மத்தியில் இருக்கும் செல்வாக்கைச் சுட்டிக்காட்டியுள்ள இவர்கள், காங்கிரஸை இணைப்பதன் மூலம் ஐ.தே.க. வடக்கு, கிழக்கில் செல்வாக்கை இழந்துவிடும் அபாயத்தையும் கட்சித் தலைமையிடம் எடுத்துக் கூறியுள்ளனர்.
இவ்வாறான பின்னணியில் தொகுதிப் பங்கீடு விடயம் தற்போது சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. இந்த சர்ச்சை தொடருமாயின் வடக்கு, கிழக்கில் பெரும்பாலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்தே போட்டியிடுமென எதிர்பார்க்கப்படுகிறது.சுஒ
