ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்கள் தவறிழைக்க மாட்டார்கள்-ஜனாதிபதி MY3

ம்முறை ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்கள் தவறிழைக்க மாட்டார்கள் எனும் பொறுப்பை தாம் ஏற்றுக்கொள்வதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

திம்புலாகல நுவரகலவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தின் போது ஜனாதிபதி இதனைக் கூறினார்.
நான் நியமித்துள்ள பிரதிநிதிகளை சரியான பாதையில் வழிநடத்திச் செல்வதற்கான திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. பொலன்னறுவை மாவட்டத்தைப்போன்று இலங்கையிலுள்ள முன்னாள் பிரதேச சபைகளின் தலைவர்களில் எத்தனை பேருக்கு இம்முறை தேர்தலிலில் போட்டியிட சந்தர்ப்பம் கிட்டியுள்ளது? திம்புலாகல பிரதேச சபைத் தலைவர் குற்றவாளியாக காணப்பட்டமையை நீங்கள் அறிவீர்கள். பொலன்னறுவையில் மாத்திரம் முன்னாள் தலைவர்கள் நால்வர் இம்முறை தேர்தலில் போட்டியிடவில்லை.

இதன்போது நுவரகல கிராம மக்களுடன் ஜனாதிபதி சிநேகபூர்வ கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.

அதனைத் தொடர்ந்து, பொலன்னறுவை சிறிபுற பிரதேசத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொண்டார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -