முஹம்மத் அன்ஸார் சாய்ந்தமருது-
கல்முனை மாநகரை கைப்பற்றுவதற்கு திட்டமிட்ட அடிப்படையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தனது காய்களை நகர்த்தியுள்ளது. இந்த சூத்திரத்தை அனைத்து மக்களும் தெளிவாக புரியும் தருணம் வந்துள்ளது.
தற்போது அகில இலங்கை மக்கள் காங்கிரஸினால் இன்று கச்சேரியில் கொடுத்துள்ள வேட்ப்பாளர் பட்டியலில் சிராஸ் மீராசாஹிப் தனது பெயரையும் விகிதாசார பட்டியல் மூலமாக தெரிவாக்குவதற்கு உட்படுத்தியுள்ளார்.
மிக அன்மையில் சாய்ந்தமருதில் வேட்ப்பாளர்களை நிறுத்துவதில்லை என மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாத் அறிவித்திருந்த நிலையில் கிடைக்கின்ற ஆசனங்களுக்கு பெறும் விகிதாசார பிரதிநிதித்துவம் மூலம் சிராசை நியமிக்கபட்டுள்ளது. இது எந்த வகையில் நியாயமானது என்பதனை பொது மக்கள் சிந்திக்க வேண்டும்.
ஏன் சிராஸ் இவ்வாறு வேட்ப்பாளராக நிறுத்தப்பட்டார் அதன் பின்னணியில் உள்ள சதி என்ன என்பதை சாய்ந்தமருது மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்
முஸ்லீம் காங்கிரசை அழிக்கும் திட்டத்தில் முழு சாய்ந்தமருது மக்களும் பலிக்கடாவாக போகிறார்கள் என்பது மாத்திரமே உண்மையாகும்
அதாவது அகில இலங்கை மக்கள் காங்கிரசுக்கு கல்முனைக்குடி மருதமுனையில் கிடைக்கும் 6 அல்லது 7 ஆசனங்களுடன் சேர்த்து மக்கள் காங்கிரஸினால் போடப்பட்ட சாய்ந்தமருது பள்ளிவாசல் சுயட்சையில் சாய்ந்தமருதில் கிடைக்கும் 10 அல்லது 12 ஆசனங்களுடன் வரும் 19 கணிசமான பெரும்பான்மை ஆசனங்களுடன் கல்முனை மாநகரின் ஆட்சியை கைப்பற்றும் சூழ்ச்சி மிக்க கைங்கரியத்தினை றிசாத் தற்போது அரங்கேற்றியுள்ளார்.
இதனைத்தான் சாய்ந்தமருது மக்கள் உணர வேண்டும். சாய்ந்தமருத்துக்கு பிரதேச சபை கிடைக்கவேண்டுமானால் ஏன் மாநகர சபை ஆட்சியினை கைப்பற்ற முனைய வேண்டும்?
கல்முனை மாநகர கைப்பற்ற ஆயத்தமாக உள்ளோம் என்கிற விடயத்தினை அண்மையில் 10.12. 2017 இல் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பேட்டியின் மூலம் சாய்ந்தமருது பள்ளித்தலைவர் இதனை உறுதி செய்துள்ளார்.
அந்த பேட்டியின்போது கேட்டகப்பட்ட கேள்வி பதிலினை எவ்வித மாற்றங்களுக்கும் இன்றி மீளவும் வாசகர்களுக்கு தருகிறோம்
கேள்வி: எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் எப்படியான முடிவை எடுக்கவுள்ளீர்கள்?
வை எம் ஹனீபாவின் பதில்:
ஒரு தீர்வு கிடைக்காமல், கல்முனை மாநகரசபை தேர்தலில் சாய்ந்தமருது சார்பாக எந்த அரசியல் கட்சிகள் போட்டியிடுவதற்கு நாங்கள் அனுமதிக்கப்போவதில்லை. சாய்ந்தமருது பள்ளிவாசல் சார்பாக சுயேட்சை அணியாக களமிறக்கவுள்ளோம். மாளிகைக்காடு மக்களும் எங்களுக்கு ஆதரவளிக்கும் வகையில், அவர்களும் சுயேட்சையில் போட்டியிடுவதற்கு தீர்மானித்துள்ளனர். இதற்கான வேட்பாளர்கள் எங்களினால் நியமிக்கப்பட்டுள்ள குழுவின் மூலமே தெரிவுசெய்யப்படுவார்கள். அரசியல்சாயம் இல்லாத சமூக நோக்கமுடைய வேட்பாளர்களைத்தான் நாங்கள் களமிறக்குவோம்.
கேள்வி: சுயேட்சை அணிமூலம் தெரிவாகும் உறுப்பினர்கள் கல்முனை மாநகரசபையில் எப்படியான செல்வாக்கை செலுத்துவார்கள்?
வை எம் ஹனீபாவின் பதில்:
சாய்ந்தமருதில் தெரிவாகும் உறுப்பினர்கள் மாநகர சபையில் பேரம்பேசும் சக்தியாக இருப்பார்கள். ஒருவேளை எங்களுக்கே மேயர் பதவி கிடைக்கலாம். எங்களுடைய கோரிக்கைக்கு யார் இணக்கம் தெரிவிக்கிறார்களோ நாங்கள் அவர்களுடன் சேர்ந்து ஆட்சியை தீர்மானிப்போம். நிபந்தனை அடிப்படையில் அவர்களை மேயராக்குவோம். இங்கு நாங்கள் சாய்ந்தமருதில் அபிவிருத்தியைத்தான் நாங்கள் பிரதானமாகக் கொள்வோம். எங்கள் அரசியல்வாதிகள் எங்களை கைவிட்டால், உரிமையை யார் பெற்றுத் தருகின்றார்களோ அவர்களுடன் நாங்கள் கைகோர்த்து நிற்போம்.
இதுதான் அவர் கூறிய பதில்
அவ்வாறாயின்!
அரசியல் சாயம் இல்லாதவர்களை தெரிவு செய்யப்போகிறோம் என்று கூறிய ஹனீபா இப்போது தெரிவு செய்திருப்பது யாரை என்ற பலமான கேள்வி எழுகிறது.
மாளிகைக்காடு உட்பட சாய்ந்தமருதில் தெரிவாகியுள்ள உள்ள அனைவரும் மயில் குஞ்சுகள் என்பதை முழு உலகும் அறியும்
அதற்காகவே முழு சுயேட்சை குழுவினையும் கட்டுப்படுத்தும் வகையில் வேட்ப்பாளர் தெரிவு இடம்பெற்றுள்ளதை மக்கள் இன்று விளங்கிக்கொண்டுள்ளனர். குடிகாரர்களுக்கு காடையர்களும் விபச்சாரிகளும் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
இதன் மூலம் தற்போது உருவாகும் இந்த தெரிவில் சாய்ந்தமருதில் சிராஸ் மீராசாஹிபை மேயராக்கி முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜவாத்த்தை பிரதி மேயராக ஆக்கும் சூழ்ச்சிக்குள் நமது பள்ளிவாசல் இறங்கியுள்ளமை பரிதாபமான நிலைமையாகும்
சாய்ந்தமருது பிரிந்தால் கல்முனை பாதிப்பில்லை என்னும் விடயத்தை மாத்திரம் விளங்கவைக்க வேண்டிய தேர்தலை பதவி மோகம் கொண்டலையும் சிராசுடன் இணைந்து சாய்ந்தமருது மக்களை ஒட்டுமொத்தமாக காட்டிக்கொடுத்து எமது மக்களின் கோரிக்கையினை முற்றாக சிதறடிக்கும் கபடத்தனத்தை மக்கள் கண்கூடாக கண்டுகொண்டுள்ளனர்.
இந்த சதியினை முறியடிக்க கட்சியின் சாய்ந்தமருது முஸ்லீம் காங்கிரஸ் தொண்டர்களுக்கு முடியுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

