மத்தியமாகாண விவசாய அமைச்சர் முன்னாள் அம்பகமுவ பிரதேசசபை தலைவர் உட்பட நால்வர் கைது

மு.இராமச்சந்திரன்-

ரணவீட்டில் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்பு டையவர்கள் என சந்தேகத்தின் பேரில் மத்தியமாகாண விவசாய அமைச்சர் மருதபாண்டி ரமேஸ்வரன் .முன்னாள் அம்பகமுவ பிரதேசசபையின் தலைவர் வெள்ளையன் திணேஸ்.மற்றும் தொழிலாளர் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள் இருவர் உட்பட நால்வரை 11.12.12017 கைது செய்துள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாமிமலை ஓல்டன் தோட்டத்தில் மரணவீடொன்றில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் காயமுற்ற அட்டன் பிரதேசத்தை சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையொருவர் காயமுற்ற நிலையில் டிக்கோய மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கண்டி வைத்தியசாலையிக்கு மாற்றப்பட்டுள்ளார்.

தாக்குதல் சம்பவம் தொடர்பில் கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாட்டுக்கமைய மேற்படி நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அட்டன் மாவட்ட நீதிமன்றில் 11.12.2017 ஆஜர்படுத்தவுள்ளதாகவும் மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -