அரசியல் குஞ்சு மதியுகனின் அறிக்கையும், இதற்கு இடம் கொடுத்து துதி பாடும் தளங்களும் ஒரு பார்வை


எழுத்தாக்கம் அபூ அஸ்ஜத்-

நேற்றைய வார இறுதி தமிழ் பத்திரிகையொன்றினை வாசிக்க கிடைத்தது.அதில் மதியுகன் என்ற புனைப்பெயரில் நபரொருவர் அரசியல் ஆய்வு ஒன்று என்று முழுப்பக்கத்தினையும் வீனடித்திருந்தார்.பத்திரிகை பக்கத்தினை நிரப்புவதற்கு இப்படிப்பட்ட கட்டுரைகளை பிரசுரிப்பதன் மூலம் ஏனையவர்கள் இந்த பத்திரிகையினை வாசிப்பதில் இருந்து ஒதுங்கிவிடும் நிலையினை தற்போது உருவாக்கியுள்ளது.இந்த நாட்டில் ஊடக கலாச்சாரம் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு இழைக்கப்படுகின்ற அநீதி தொடர்பில் குரல் எழுப்ப இன்று பொதுமக்கள் முன்வராத நிலைக்கு ஊடகங்களின் பக்கசார்பும் காரணமாகும்.

குறிப்பாக தினகரனை அரச பத்திரிகை என்றும் ஏனைய பத்திரிகைகளை அரசாங்கத்தை சாராதவர்களின் கருத்துக்களை பிரசுரிக்கும் ஒன்றாகவே பார்த்துவந்தனர். அதிலும் குறிப்பாக சில தமிழ் பத்திரிகைகள் எல்லா அரசியல் தலைவர்களினதும் கருத்துக்களை வாசகர்கள் அதனை தீர்மாணிக்கும் ஒன்றாக சந்தர்ப்பம் வழங்கி வருகின்றது.

ஆனால் ஒரு தமிழ் பத்திரிகை முழுமையாக ஒரு சிறுபான்மை அரசியல் கட்சியொன்றின் பிரதி நிதயாக மாறியுள்ளதா ?என்ற கேள்வியினை ஏற்படுத்தியுள்ளது.அது அவர்களின் விருப்பம் என்று விட்டுவிடுவோம்.ஆனால் வாசகர்களை பொறுத்த வரையில் பொய்யான ஆய்வுகளை சமர்ப்பிக்கின்ற செய்திதாள் தொடர்பில் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என்பது எனது ஆழமான வேண்டுகோளாகும்.

இனி சமாசாரத்துக்கு வருகின்றேன்……

நேற்றைய ஞாயிறு வாரபத்திரிகை ஒன்றில் வெளியான ஆழ்ந்த துாக்கத்தில் எழுதப்பட்டிருந்த கட்டுரை நகைப்புக்கிடமானதாகவே இருந்தது.ஊடகத்துறையில் அனுபவமில்லாதவர்கள்,பொதுமக்களுக்கு ஊடகத்தின் மூலம்் பிழையான கருத்தை ஊண்டிவிதைக்க முயற்சிக்கும் ஒரு கட்டுரையாக அதனை பார்க்க முடிந்தது.

அந்த கட்டுரையாளர் யார் என்பதை அறிவதற்கு முன்னர் அவரது எழுத்துக்கள் ஒரு கட்சியின் சரிவினை எப்படியாவது தடுத்து அந்த கட்சி தான் இலங்கை முஸ்லிம்களின் உரிமைக்கான கட்சி என்று கூறுமாறு வழங்கப்பட்ட கூலிக்கு சற்றும் துரோகம் இல்லாமல் எழுதியுள்ளதை பாராட்டாமல் இருக்க முடியாது,இது மனித விஸ்வாஸத்தை தாண்டி ஜந்தறிவு ஜீவனுக்கு ஊதாரணமாக சொல்வது மிகவும் பொருத்தமானதாக பார்க்க நேரிட்டுள்ளது.

எதிர்வரும் உள்ளளுராட்சி மன்றத் தேர்தலில் அவர் சார்ந்த கட்சி கோலோச்சம் ஏறியுள்ளதாகவும்,ஏனைய கட்சி என்ற ஒன்று இல்லை என்றும் அவரது ஆய்வு சொல்வதாக புத்தி சுவாதீனத்துடன் தீட்சை கிடைக்கப் பெற்ற ஒருவர் போன்று கருத்து பதித்துள்ளதை வைத்து அவரது அறிவின் உச்சத்தையும்,அரசியல் கல நிலவரத்தையும் இவர் போன்ற பெரும் புத்தி கொண்டவர்கள் தானா அந்த கட்சியின் எழுத்தாளர்களாக

இருக்கின்றனர என்பதை பார்க்கின்ற போது பெருமையாகவே இருக்கின்றது.தலைவர் எபபடியோ அப்படித்தான் தொண்டர்கள் இருப்பார்கள் என்பதற்கு போதுமான ஆதாரமாக இந்த மதியுகன் சாரின் கட்டுரை ஜொலிக்கின்றது.

கணப்பீட்டில் சுட்டிக்காட்டியுள்ள மதியுகன் முதலில் வன்னி மாவட்டத்தில் குறிப்பாக முசலி பிரதேச சபை தொடர்பில் ஆறுடம் தெரிவித்துள்ளார்.வடக்கில் வாழ்ந்த முஸ்லிம்கள் புலிகளினால் வெளியேற்றப்பட்ட காலத்தில் அவர்களுக்காக குரல் கொடுத்த அரசியல் தலைமைகளின் பட்டியலை மறைத்து எல்லாம் தற்போதைய மு.கா தலைவரினால் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றார்.மர்ஹூம் அமைச்சர் அஷ்ரப்,முன்னாள் பிரதி அமைச்சர் .அல்-ஹாஜ்.அபூபக்கர், மர்ஹூம் நுார்தீன் மசூர்,அதன் பிற்பாடு அமைச்சர் றிசாத் பதியுதீன் இவர்கள் தான் இந்த வடக்கு முஸ்லிம்களின் இரத்தத்துடன் இரண்டரக்கலந்தவர்கள் என்பதை எவராலும் அழிக்க முடியாது.இதற்கிடையில் அரசியல் ரீதியில் ஆட்டம் போட்ட முன்னாள் எம்.பி ஹூனைஸ் பாருக் அவர்களும் இந்த மக்களுக்கு ஏதாவது ஒரு வகையில் சில உதவிகளை செய்துள்ளார்.இவர் செய்வதற்கு சந்தர்ப்பத்தினை பெற்றுக் கொடுத்தவர் அமைச்சர் றிசாத் பதியுதீன் என்பதை இங்கு தெளிவாக சுட்டிக்காட்ட வேண்டியது எமது கடமையாகும்.

முசலி பிரதேசம்என்பது முஸ்லிம்களை பெரும் பான்மையாக கொண்டதாகும்.யுத்தத்தின் பின்னர் மீள்குடியேற்றம் ஆரம்பமான போதுஇடம் பெற்ற உள்ளுராட்சி சபை தேர்தலில் அமைச்சர் றிசாத பதியுதீனை தலைவராக கொண்ட அகில இலங்கை மக்கள்காங்கிரஸ் அப்போதைய அரசாங்கத்துடன் செய்து கொண்ட உடன்படிக்கையின் பிரகாரம் முசலி பிரதேச சபையினை வெற்றி கொண்டு வடக்கில் ஒரேயொரு முஸ்லிம் பிரதேச சபை என்ற நாமத்தை பதித்தது.இதனது தலைவராக தொழிலதிபர் யஹ்யான் .பிரதி தலைவராக எம்.பைரூஸ்,ஏனைய உறுப்பினர்களாக சுபியான்,காமில்,சுல்பிகார் ஆகியோர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதி நிதிகாக தெரிவானதுடன்,ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் போட்டியிட்வர்களில் எம்.ஜசீல் தெரிவானார்.இந்த நிலையில் அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்களின் தலைமையில் முசலி பிரதேசம் பாரிய அபிவிருத்திகளை கண்டுவருகின்றது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினரான ஜெசீல் அவரது கட்சியிடம் இந்த மக்களின் தேவை தொடர்பில் என்னிலடங்காத முறை சென்று முறையிட்டு அவற்றை பெற்றுக் கொடுக்குமாறு வேண்டிய போதும்,முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் அபிவிருத்தியை கொண்ட தல்ல உரிமையினை தான் பேசும் என்று கூறி அனுப்பி சந்தர்ப்பங்கள் ஏராளம்.இந்த நிலையில் முஸ்லிம் சமூகத்திற்கு குறிப்பாக வன்னி மக்களுக்கு சாபக் கேடான இந்த முஸ்லிம் காங்கிரஸ்பொறுத்தமற்றது என தீர்மானித்த ஜெசீல் அவர்கள் அமைச்சர் றிசாத் பதியுதீனுடன் இணைந்து மக்கள் பணியினை செய்ய புறப்பட்டார்.

அன்றிலிருந்து இந்த முஸ்லிம் காங்கிரஸ் இங்கிருந்து துரத்தப்பட்டது.அன்றிலிருந்து இன்று வரை இந்த முசலி பிரதேசம் முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல தமிழ மக்களையும் அரவனைத்து அவர்களது தேவைகளையும் பெற்றுக்கொடுக்கும் வகையில் அமைச்சர் றிசாத் பதியுதீனின் தலைமையில் செயற்பட்டுவருகின்றார்.இந்த பிரதேச சபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு இருந்து வந்த அந்த பிரதி நிதித்துவமும் பறிபோய் ஓட்டாண்டியாக இருந்தததை வார இதழ் கட்டுரையில் மதியுகன் (கராட்டி மாஸ்டர் ) சொல்லாமால் மறைத்து ஏன்,?அது போல் மதியுகனின் குருட்டு கண்காளல் இருளை தான் பார்க்க முடியுமே தவிர் அமைச்சர் றிசாத் பதியுதீன் அந்த மக்களுக்கு பெற்றுக் கொடுத்துள்ள வெளிச்சத்தை பார்க்க முடியாதுள்ளது என்பதும் உண்மையாகும்.இந்த நிலையில் முசலி மக்கள் அமைச்சர் றிசாத் பதியுதீனை புறக்கணித்துவருவவதாகவும் ,மதியுகன் எழுதும் முஸ்லிம் காங்கிரஸ் கோலோச்சம் கண்டுவருவதாகவும் பெற்ற கூலிக்காக கூட்டிக் கொடுக்கும் பணயினை படு கச்சிதமாக செய்வதை பாராட்டியாக வேண்டும்.

அடுத்து கிழக்கு தொடர்பில் எழுதியுள்ள ஊகங்கள் மூலை முடுக்குகளில் எல்லாம் முஸ்லிம் காங்கிரஸ் கயிற்றில் உச்சத்தில் தொங்கிவருவதாகும்,இது தான் கிழக்கிலும் மு.கா.கோலோச்சம் ஏறியுள்ளதாக மதியுகன் மதியிழந்து நாதியற்ற நிலையில் வங்குரோத்துக்கு செல்லும் மு.கா.வுக்கு இவ்வாறான பொய்,பித்தலாட்டமான தகவல்களை மக்களுக்கு கொடுத்து ஒட்சிசனை ஏற்றும் வேலையினை செய்கின்றார் என்பது தெளிவானதாகும்,முன்னாள் பிரதி அமைச்சரும்,மு.கா.வின் முன்னாள் செயலாளருமான ஹஸன் அலி,தவிசாளர் பசீர் சேகுதாவூத் அட்டாளைச்சேனை அன்சில்,சம்மாந்துறை நவ்சாத்,நிந்தவூர் தாஹிர்,ஓட்டமாவடி ஹமீட்,குச்சவெளி முன்னாள் மு.கா.உறுப்பினர் சல்மான் பாரிஸ்,இவர்கள் யார் என்று இந்த மதியுகனுக்கு தெரியாது போலும்,எழுதிக்கொடுப்பதற்கு பெயர் போடும் சோரம் கெட்டவர்களுக்கு யார் பிள்ளை பெற்றாலும் தமக்கென்ன தான் தான் அவர்களுக்கு வாப்பா என்று கூறும் மானங்கெட்ட வேலைகளில் ஈடுபடுவதை இந்த கட்டுரையின் எழுத்துக்களை வாசிக்கின்ற போது தெரிகின்றது.

அது மட்டுமல்ல அரசியல் அறிவில்லாத மதியுகத்தான் குறைந்தது சுய சிந்தணையிலாவது நிற்காமல் பிரத்தியோகனின் பிச்சைப்பாத்திரத்திற்கு ஆசைப்படும் அசிங்கத்தனமான ஆய்வினை செய்துள்ளதன் பின்னணி,மதியுகனின் பைகள் நிறைந்துள்ளதை இங்கு கூறியாக வேண்டும்.

இப்படிப்பட்ட மதியுகனுக்கு களம் அமைத்து கொடுத்து அதனை மக்களுக்கு கொண்டு செல்லும் ஊடகங்கள் தொடர்பிலும் மக்கள் தீர்மாணிக்காமலில்லை.அமைச்சர் றிசாத் பதியுதீன் தமிழ்,முஸ்லிம்,சிங்கள மக்களுக்கு ஆற்றிவரும் அளப்பறிய மனித நேய பணிகளைால் தோல்வியடைந்து புற முதுகு காட்டி ஓடிக்கொண்டிருக்கும் இனவாதிகள் இப்படியான பொய்யான ஆய்வுகளை கூலிகளையும்,கையாளாதவர்களையும் வைத்துக் கொண்டு மேற்கொள்ளும் பொய் பிரசாரங்களால் ஒரு போதும் மக்கள் ஏமாறப் போவதில்லை என்பது உண்மையாகும்.

இவ்வாறான பொய்யர்களை போலி முகங்களை சமூகத்தின் முன் கொண்டுவந்து மக்கள் நீதிமன்றில் தண்டனை பெற்றுக் கொடுக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை என்பதை நினைவுபடுத்தவிரும்புகின்றேன்.சமூகம் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை தானும் ,தனது கைக்கூலிகளும் வயிறு புடைக்க உண்டு புரண்டு ஏமாற்று வாழ்க்கையில் வாழுவதே சிறப்பு என்று கருதும் ஈனர்களுக்கான தீர்ப்பு பெப்ரவரி மாதம் கிடைக்கும் என்பது சத்தியமாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -