மையவாடிகளில் கபுறுகள் வெட்டி மிகப் பெரும் சமூகப்பணியாற்றி வரும் சகோதரா்கள் பலர் பொருளாதார வசதிகளின்றி பல பிரதேசங்களில் வாழ்ந்து வருவதனைக் காண முடிவதாக முன்னால் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறுாக் தெரிவித்தார்.
சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.எஸ்.எம்.நுார்தீன் அவர்களின் முக நுால் ஊடாக தெரிவிக்கப்பட்ட விடயமறிந்து காத்தான்குடி ஏழைத் தொழிலாளி கே.எம்.செய்யது அஹமது அவர்கற்கு துவிச்சக்கர வண்டி வழங்கும் நிகழ்வு (05.12.20017 செவ்வாய் இரவு) முன்னால் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறுாக் அவர்களின் காரியாலயத்தில் இடம் பெற்றது..
விடயமறிந்து இப்படிப்பட்ட நற்பணியாளர்களுக்கு உதவுவதில் நாம் முந்திக் கொள்ள வேண்டும் என்ற நோக்கம் தனக்கு ஏற்பட்டதாக பொறியியலாளர் சிப்லி பாறுாக் தெரிவித்தார்.
கருத்து தெரிவித்த ஏழைத் தொழிலாளி கே.எம்.செய்யது அஹமது……..
நான் முதலில் அழ்ழாவுக்கு நன்றி செலுத்துகின்றேன். மேலும் இவ்வாறான உதவிகள் கிடைக்க வழிசமைத்த சிரேஷ்ட ஊடகவியாளர் எம்.எஸ்.எம்.நுார்தீன் அவர்களுக்கு துஆ செய்வதோடு இந்த நல்ல பணிகளை செய்து வரும் முன்னால் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறுாக் சேரை நானும் என் குடும்பமும் ஒரு போதும் மறக்க மாட்டோம் காரணம் நான் ஆற்றுக்கு சென்று மீன் பிடித்தொழில் புரிபவன் பல மாதங்களுக்கு முன் ஆற்றில் கிடந்த எனது வலையை யாரோ திருடிக் கொண்டு சென்று விட்டனர் கஸ்டம் காரணமாக விடயத்தை சிப்லி சேரிடம் கூறிய போது மறுப்பின்றி பல ஆயிரம் பெறுமதியான வலையினை யாருக்கும் தெரியாமல் வாங்கித் தந்து உதவிய சகோதரர் சிப்லியை நாங்கள் ஒரு போதும் மறக்க மாட்டோம் என கே.எம்.செய்யது அஹமது காக்கா தெரிவித்தார்.
