இராஜங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் ஊடகங்களுக்கு தெரிவித்த கருத்து...

ட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெறவுள்ள உளு;ளுராட்சி மன்றத்தேர்தலில் பணிரெண்டு உள்ளுராட்சி மன்றங்களை ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி கைப்பற்றும் என்று மீள்குடியேற்ற இராஜங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் nரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்த பின்னர் இன்று வியாழக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற் சொன்னவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்.

ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி மட்டக்களப்பு மாவட்டத்தில் பணிரெண்டு உள்ளுராட்சி மன்றங்களிலே போட்டியிடுகின்றது அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பாரியளவான அபிவிருத்திகள் செய்ய வேண்டியுள்ளது இத் தேர்தல் ஆட்சியை மாற்றுகின்ற தேர்தல் அல்ல இத் தேர்தல் தங்களது பிரதேசங்களை அபிவிருத்தி செய்கின்ற பிரதேசத்தை சுத்தம் செய்கின்ற தேர்தல்.

இன்னும் மூன்று வருடங்களுக்கு இந்த ஆட்சி தொடரும் அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து இன மக்களும் ஒன்று பட்டு ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கு வாக்களித்து வெற்றியடையச் செய்வதன் மூலம் எதிர்வரும் நான்கு ஆண்டுகளில் ஒரு புதிய புரட்சியின் மூலம் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும் என்றும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -