ஏறாவூர் ஏ.ஜீ.முஹம்மட் இர்பான்-
தற்காலிக பொதுச் சந்தை வியாபாரிகளுடனான கலந்துரையாடல் ஏறாவூர் நகர சபையின் செயலாளரும், விசேட ஆணையாளருமான தலைமையில் நேற்று (11) நகர சபையின் கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன்போது, சந்தை வியாபாரிகள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் பற்றி ஆராயப்பட்டதுடன் நகர சபையினால் முன்னெடுக்கப்படுகின்ற கோரிக்கைகளுக்கு பரிபூண ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும் என்று செயலாளர் கேட்டுக்கொண்டார்.
குறிப்பாக சுகாதார மேற்பார்வையாளரினால் வியாபார நிலையங்களை பரிசோதனை செய்தல், சந்தை வியாபாரிகள் தமது வாகனங்களை குறிப்பிட்ட இடத்தில் தரித்தல், செலுத்தப்படாமல் இருக்கின்ற வர்த்தக நிலையத்தின் நிலுவைகளை செலுத்துதல், நீரிணைப்பினை பெற்றுத்தருதல் மற்றும் புதிதாக மலசல கூடத்தினை நிர்மாணம் செய்து பராமரிப்பதற்கு தொழிலாளர் ஒருவரை நிமித்தல் போன்ற பல விடயங்கள் பற்றி கலந்துரையாடப்பட்டன.
இதில் பிரதம முகாமைத்துவ உதவியாளர் வை.ஹாஜா முகைதீன், தொழில்நுட்ப உத்தியோகத்தர் எஸ்.தயாளன், வருமான பரிசோதகர் எம்.எச்.எம்.தாரிக், பொதுச் சுகாதாரப் பரிசோதகர் எஸ்.எம்.எம்.முபாரக், சுகாதார மேற்பார்வையாளர் ஏ.எம். பைசல், வாகன மேற்பார்வையாளர் எம்.எச்.ஐனுதீன், சந்தை வியாபாரிகளின் தலைவர் எம்.ஏ.அபூல் ஹசன், செயலாளர் ஏ.கபீர், பொருளாளர் எஸ்.எம்.யாக்கூப் மற்றும் சந்தை வியாபாரிகள் அனைவரும் இக்கலந்து கலந்துகொண்டனர்.