மெஸ்ரோ ஸ்ரீலங்கா நிறுவனத்தின் ஸ்தாபகத் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி அல்-ஹாஜ் எச்.எம்.எம். ஹரீஸின் வேண்டுகோளுக்கு அமைவாக அட்லாண்டிக் நிறுவனத்தின் நிதி உதவியில் அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசலை அதிதீவிர சிகிச்சைப் பிரிவுக்கான செயற்கை சுவாச இயந்திரம் (வென்டிலேடர்) வழங்கிவைக்கும் நிகழ்வு நாளை (16) சனிக்கிழமை குறித்த வைத்தியசாலையில் நடைபெறவுள்ளது.
கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசலை அத்தியட்சகர் டாக்டர் ஏ.எல்.எம். றகுமான் குறித்த இயந்திரத்தின் அத்தியவசியத் தேவை தொடர்பில் மெஸ்ரோ ஸ்ரீலங்கா நிறுவனத்தின் ஸ்தாபகத் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான எச்.எம்.எம். ஹரீஸ் மற்றும் அந்நிறுவனத்தின் தலைவர் சட்டத்தரணி நசீல், இணைப்பாளர் ஜின்னா உள்ளிட்டோரிடம் எடுத்துக்கூறி அவ்வியந்திரத்தை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்தமைக்கு அமைவாக மேற்படி இயந்திரம் வழங்கிவைக்கப்படவுள்ளது.
மெஸ்ரோ ஸ்ரீலங்கா நிறுவனத்தின் தவிசாளராகிய டுபாய் நாட்டைச்சேர்ந்த சேக் நாசிமிடம் குறித் வேண்டுகோள் தொடர்பாக விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ஹரீஸ் கூறியதோடு இப்பிரதேச மக்களின் சுகாதார சேவையினை சிறப்பாக வழங்குவதற்கு செயற்கை சுவாச கருவியின் அவசியத் தேவையினை வலியுறுத்தியமைக்கு அமைவாக அட்லாண்டிக் நிறுவனத்தின் தலைவர் சேக் நாசிமினால் 25 இலட்சத்தி 75 ஆயிரம் ரூபா பெறுமதியான குறித்த இயந்திரம் கொள்வனவு செய்யப்பட்டு அவரினால் நாளை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு வழங்கிவைக்கப்படவுள்ளது.
இவ்வியந்திரம் அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசலைக்கு கிடைக்கப்பெறுவதன் மூலம் இப்பிரதேச மக்கள் பெரும் நன்மையடைவர் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
