பெரிய கட்சிகளின் ஒருசில அரசியல்வாதிகள் பாதாள, கொலைவெறி, இனவாத, போதைவஸ்து போன்ற சமூக அநீதிகளுடன் தொடர்புள்ள நபர்களை முன்னிறுத்தி அரசியல் செய்கிறார்கள். எங்கள் ஒருமித்த முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை நாம்,இந்த சமூக அநீதிகளுடன் தொடர்பில்லாதவர்களாக தெரிவு செய்து ஏணி சின்னத்தில் போட்டியிட வைத்துள்ளோம். அத்துடன்,எமது கொழும்பு மாநகரசபை வேட்பாளர் பட்டியலில் தமிழ், சிங்கள, முஸ்லிம் வேட்பாளர்கள் உள்ளனர். தெருத்தெருவாக, வீடு வீடாக சென்று நான் தைரியமாக பிரச்சாரம் செய்கிறேன்.
ஆனால், சிலருக்கு மக்கள் முன்வர பயம். கொழும்பு மாநகர மக்கள்,தங்களிடம் கேள்விகளை கேட்க வழிமேல் விழிவைத்து காத்திருக்கின்றார்கள் என்பது அவர்களுக்கு தெரியும் என ஜனநாயக மக்கள் முன்னணி மற்றும் முற்போக்கு கூட்டணி தலைவரும், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சருமான மனோ கணேசன், கூட்டணியின், கொழும்பு மாநகரசபை தேர்தல் பிரச்சாரத்தை கொழும்பு ஜம்பெட்டா வீதியில் இன்று ஆரம்பித்து வழிநடத்திய போது கூறினார்.
அங்கு அமைச்சர் மனோ மேலும் கூறியதாவது,
வன்முறையை காட்டி என்னை மிரட்ட முடியாது. இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று, நான் இதைவிட நாட்டு பாதுகாப்புக்கு செயலாளராக இருந்த பெரிய கொம்பர்களையே பார்த்தவன். அடுத்தது, இன்று இந்த வன்முறை பாதாள,கொலைவெறி, இனவாத, போதைவஸ்து தொடர்புகளில் முன்னெடுக்கப்படும் அரசியல் முடிவுக்கு வந்துவிட்டது.
தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மகிந்த தேசப்பிரிய மற்றும் தேர்தல்கள் கண்காணிப்பு குழுவினர்கள், இத்தகைய சமூக விரோத அரசியல்வாதிகள் மீது ஒருகண் வைத்தப்படி இருக்கிறார்கள். இத்தகைய நபர்கள் தொடர்பில் நான் நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் விளக்கமாக கூறியுள்ளேன். பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கலந்துரையாடியபோது சுட்டிக்காட்டியுள்ளேன்.
எனவே எவராவது எங்களை மிரட்ட முயல்வார்களேயானால் அவர்களுக்கு தங்கள் வாக்குகளைகூட இந்த தேர்தலில் அளிக்க முடியாத நிலைமை ஏற்படும் என்பது கூறிவைக்க விரும்புகிறேன். தமிழ் மக்களுக்கு கொழும்பு மாநகரில் உரிய பிரதிநிதித்துவத்தை பெறவே நான் முயல்கிறேன். இந்த முயற்சியை நான் எப்போதும் செய்து வந்துள்ளேன்.
கொழும்பில் இருந்து எங்களை அகற்றிவிட்டு அந்த இடத்தில் தனக்கு தேர்தகள் காலத்தில் நிதி உதவி செய்தவர்கள், அழைத்து சென்று விருந்து உபசாரம் செய்தவர்கள், பாதாள உலகத்துடனும், போதைவஸ்து வியாபாரிகளுடனும் தொடர்பு உள்ள ஒருசில தமிழர்களை கொண்டு வந்து அவர்களை தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக உருவாக்க எடுக்கப்படும் முயற்சிகளை தமிழ் மக்களும்,முஸ்லிம் மக்களும் அடையாளம் கண்டுக்கொள்ள வேண்டும். உங்கள் பிள்ளைகளை, போதைவஸ்து, பாதாள உலகம் ஆகிய குற்றங்களில் இருந்து பாதுகாக்க வேண்டுமானால், நீங்கள் எங்கள் ஏணி சின்ன வேட்பாளர்களை ஆதரிக்க வேண்டும்.
அத்துடன், முதல் இலங்கை மேயர் இரத்தினசோதி சரவணமுத்து என்ற தமிழரே என்ற அடையாளத்துடன் 1937ம் வருடம் ஆரம்பமான கொழும்பு மாநகரசபை தமிழர் அரசியல் இன்று தமிழ் பெயர் கொண்ட இத்தகைய சமூக விரோதிகளிடமும், சில பெரும்பான்மை அரசியல்வாதிகளை தேர்தல் காலங்களில் அழைத்து சென்று விருந்து வைத்த ஒரே தகைமை கொண்ட தமிழர்களிடமும் சென்று அடைக்கலம் புக முடியாது. கொழும்பில் சிறுபான்மை மக்களை அவமானப்படுத்தி தங்கள் எடுபிடிகளை தமிழர் பிரதிநிதிகளாக காட்ட முயன்று எங்கள் தன்மானத்துடன் விளையாட வேண்டாம் என சம்பந்தப்பட்டவர்களை கேட்டுக்கொள்கிறேன்.