தமிழ் தேசியச் கூட்டமைப்பின் மூன்று கட்சிகள் ஒரு இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளன.

ஏ.எஸ்.எம்.ஜாவித்-

திர் வரும் உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள் ஏற்பட்டுள்ள முறுகள் நிலை காரணமாக திண்டாடிக் கொண்டிருந்த அக்கட்சி நடைபெற இருக்கும் உள்ளூராட்சித் தேர்தலில் பிரிந்து கேட்கும் நிலை ஏற்பட்டதை நிவர்த்தி செய்யும் வகையில் அக்கட்சிகளின் பிரதிநிதிகள் கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் எதிர்க்கட்சித் தலைவரும், கூட்மைப்பின் தலைவருமான இரா சம்பந்தன் தலைமையில் இன்று (09) கூடி சுமார் ஐந்து மணி நேரம் கலந்துரையாடியுள்ளனர்.

இதன்போது தழரசுக் கட்சி, டெலோ, புளொட் ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகளான மாவை சேனாதிரபஜா, சுமந்திரன், சிவாஜி லிங்கம், சித்தார்த்தன், வியாழேந்திரன், செல்வம் அடைக்கல நாதன், விநோ நோகராக லிஙக்கம், டெலா இயக்கத்தின் செயலாளர் நாயகம் சிறிகாந்தா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர். இவர்கள் தற்போது ஏற்பட்டுள்ள குழப்ப நிலைமைகளில் தமிழ் மக்களின் பல்வேறுபட்ட பிரச்சினைகள் உள்ளிட்ட பல விடயங்களை கதைத்துள்ளனர்.

இதன்படி இக்கட்சிகள் ஒரு சமரச இணக்கப்பட்டுக்கு வந்து தமிழரசுக் கட்சி, டெலோ, புளொட் ஆகிய மூன்று கட்சிகளும் இம்முறை வீட்டுச் சின்னத்தில் ஒரே கூரையின் கீழ் தேர்தலில் களமிறங்குவதாக முடிவு எட்டப்பட்டுள்ளது. இக்கட்சிகளுக்குள் பல்வேறுபட்ட பிரச்சினைகள் இருக்கின்ற போதிலும் தமிழ் மக்களின் அபிலாசைகளை கருத்திற் கொண்டு இந்த இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதாக அக்கட்சிகளின் பிரதி நிதிகள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தனர் தெரிவித்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -