அம்பாறையில் இரு சுயேச்சை அணிகள் கட்டுப்பணம் செலுத்தினர்..!


 காரைதீவு நிருபர் சகா-

திர்வரும் உள்ளூராட்சிமன்ற தேர்தலில் சுயேற்சையாக போட்டியிட சாய்ந்தமருது மாளிகைக்காடு மக்கள் பணிமனை தீர்மானித்ததற்கமைவாகஇ நேற்று (08) கல்முனை மாநகரசபை மற்றும் காரைதீவு பிரதேச சபை ஆகியவற்றுக்கான இரண்டு சுயேற்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தின.

சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆ பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைத் தலைவர் வை. எம். ஹனீபா தலைமையில் கல்முனை மாநகரசபைக்கும்
சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆ பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை உறுப்பினரும் மாளிகைக்காடு சைத் இப்னு தாபித் பள்ளிவாசல் தலைவருமான எம்.ஐ. ஸாஹிர் ஹுஸைன் தலைமையில் காரைதீவு பிரதேச சபைக்கும் கட்டுப்பணங்கள் செலுத்தப்பட்டன.

கல்முனை மாநகரசபைக்காக போட்டியிடும் கட்சிகள் சுயேற்சைக்குளுக்களுக்கான வரிசையில் கட்டப்பட்ட முதலாவது கட்டுப்பணம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

இத்துடன் காரைதீவு பிரதேசசபைக்கு இரு சுயேச்சை அணிகள் தமிழர் சார்பாகவும் முஸ்லிம்கள் சார்பாகவும் கட்டுப்பணம் செலுத்தப்பட்மை குறிப்பிடத்தக்கது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -