ஆதிப் அஹமட்-
நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சின் இணைப்புச் செயலாளர் யு.எல்.எம்.என்.முபீன் அவர்களின் வேண்டுகோள் மற்றும் முயற்சியின் பேரில் நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத்தலைவருமான றவூப் ஹக்கீம் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் புதிய காத்தான்குடி பகுதிகளில் கொங்கிறீற்று வீதிகளாக புணரமைக்கப்படவுள்ள கர்பலா வீதி முதலாம் குறுக்கு வீதி(நிதி ஒதுக்கீடு 24 இலட்சம்),அப்ரார் வீதியின் மூன்றாம் மற்றும் நான்காம் குறுக்கு வீதி(நிதி ஒதுக்கீடு 31 இலட்சம்) மற்றும் அன்வர் பாலர் பாடசாலை வீதி உட்பட அதன் குறுக்கு வீதிகளுக்கு(நிதி ஒதுக்கீடு 80 இலட்சம்) அடிக்கல் நட்டு வேலைத்திட்டங்களை அங்குரார்ப்பணம் செய்கின்ற நிகழ்வு நேற்று (08.12.2017) இடம்பெற்றது.
இந்நிகழ்வில் நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சின் இணைப்புச் செயலாளர் யு.எல்.எம்.என்.முபீன் அவர்கள் பிரதம அதிதியாகவும் கௌரவ அதிதிகளாக முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் மற்றும் காத்தான்குடி நகர சபையின் செயலாளர் திருமதி.றிப்கா ஷபீன் ஆகியோர் உற்பட முக்கிய பிரமுககர்கள் பொது மக்களென பலரும் கலந்து சிறப்பித்தனர்.



