அட்டாளைச்சேனை நடுவர் சங்கத்திற்கு விளையாட்டு உபகரணம்....


எம்.ஜே.எம். சஜீத்-

ட்டாளைச்சேனை நடுவர் சங்கத்தின் மாதாந்த கூட்டமும், விளையாட்டு உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்வும் இன்று (23) தைக்காநகர் பிரதேசத்தில் ஆர்.ஹாறூன் ஆசிரியர் இல்லத்தில் நடைபெற்றது.

நடுவர் சங்கத்தின் தலைவரும், அம்பாரை மாவட்ட மெய்வல்லுநர் பயிற்றுவிப்பாளருமான எஸ்.எல்.தாஜூதீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முன்னளாள் அமைச்சரும், அம்பாரை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இணைத்தலைவருமான எம்.எஸ்.உதுமாலெப்பை பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்தார்.

இதன்போது கிழக்கு மாகாண முன்னளாள் அமைச்சர் உதுமாலெப்பையின் 2017ஆம் ஆண்டுக்கான மாகாண சபை நிதியொதுக்கீட்டின் ஊடாக அட்டாளைச்சேனை நடுவர் சங்கத்திற்கு ஒருதொகுதி விளையாட்டு உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டது.

அட்டாளைச்சேனை நடுவர் சங்கத்தின் உறுப்பினரும், ஆசிரியருமான ஏ.எல்.அஜ்மல் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் தேசிய காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -