நிந்தவூர் நலன்புரிச் சபை ஏற்பாட்டில் பல்வேறு துறை சாதனையாளர்கள் கௌரவிப்பு


ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ்-

நிந்தவூர்க் கோட்டப் பாடசாலை மாணவர்களுக்கிடையில் 'பொலித்தீனுக்கு மாற்றுப் பொருள் என்ன' எனும் தலைப்பில் நிந்தவூர் நலன்புரிச் சபை நடாத்திய சித்திரம், கட்டுரை, மற்றும் பேச்சுப் போட்டிகளில் பங்கு கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளைக் கௌரவிக்கும் நிகழ்வும், சித்திரக் கண்காட்சியும் நேற்று நிந்தவூர் அல்-மஸ்ஹர் பெண்கள் உயர்தரக் கல்லூரியில் இடம்பெற்றது.

முன்னாள் மாகாணக் கல்விப்பணிப்பாளரும், நிந்தவூர் நலன்புரிச் சபைத் தலைவருமான எம்.எச்.யாக்கூப் ஹசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுகளில் கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.ரி.அப்துல் நிசாம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

மேலும், இந்நிகழ்வுகளில் நிந்தவூர் கோட்டக் கல்விப் பணிப்பாளர் திருமதி.ஜிஹானா அலீப், தென்கிழக்குப் பல்கலைக் கழக சிரேஷ்ட விரிவுரையாளர் ஏ.ஏ.நசீர் அஹமட், கல்முனைக் கல்வி வலய முன்பள்ளி உதவிக் கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.எம்.றசீன், அம்பாரை மாவட்ட நீர்வழங்கல் பிரதம பொறியியலாளர் ரி.இஸ்மாயில், அமைப்பின் நிகழ்ச்சித் திட்டப்பணிப்பாளர் யூ.எல்.உமர் அலி, பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் எனப்பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

போட்டிகளில் தெரிவு செய்யப்பட்ட மாணவ, மாணவிகளுக்குப் பெறுமதியான பரிசில்களும், சான்றிதழ்களும் அதிதிகளால் வழங்கி, கௌரவிக்கப்பட்டது.

மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.ரி.அப்துல் நிசாம் இங்கு கருத்துத் தெரிவிக்கையில்:- ' ஒரு சிறந்த ஓவியன் எதையும் நேரியதாகப் பார்க்கின்ற பண்புடையவனாக இருப்பான். சமூதாயத்தை அல்லது சூழலைப் பார்க்கின்ற போது, அந்த சூழலில் எது கோணலாக இருக்கின்றதோ, அதைச் சரியாக அல்லது, நேரியதாக உருவாக்க வேண்டும் என்று நினைப்பவன்தான் ஓவியன். எனவே நல்ல சமுதாயத்தை உருவாக்குவதில் ஓவியனின் பங்கும் அழப்பரியது' எனத் தெரிவித்தார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -