மருதமுனை சைல்ட் பெஸ்டின் வருடாந்த பாடசாலை விழா 2017













எம்.வை.அமீர்-

பிராந்தியத்தின் முன்னோடி முன்பள்ளிகளில் ஒன்றான சைல்ட் பெஸ்ட் ஆங்கிலக் கல்லூரியின் 13 ஆவது வருடாந்த பாடசாலை விழா, நிறுவனத்தின் தலைவரும் தென்கிழக்குப் பல்கலைக்கழக ஆங்கில பிரிவின் தலைவரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி ஏ.எம்.எம்.நவாஸ் தலைமையில் 2017-12-09 ஆம் திகதி மருதமுனை அல் மனார் மத்திய கல்லூரியின் கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.

கல்லூரியின் மாணவ முத்துக்களின் குழு நடனங்கள் கலை மற்றும் தனி நிகழ்வுகள் என அரங்கேறிய நிகழ்வுக்கு பிரபல சத்திர சிகிச்சை நிபுணர் வைத்திய கலாநிதி சித்தீக் ஜெமீல் பிரதம அதிதியாக கலந்துகொண்டிருந்தார்.

குழந்தைகளின் ஆங்கில தமிழ் மொழி விருத்திக்கும், ஏனைய திறன் விருத்திகளுக்கும், மார்க்கத்தையும் ஏனைய மனிதர்களையும் நேசிக்கக்கூடிய ஆளுமை மிக்க ஒருவராகவும், பாடசாலைக் கல்வியிலும் ஏனைய திறன்களிலும் முன்னிலை பெறக்கூடிய மாணவர்களை கடந்த 13 வருடங்களாக உருவாக்கி வரும் சைல்ட் பெஸ்ட் ஆங்கிலக் கல்லூரியின் வருடாந்த நிகழ்வுகளுக்கு கல்முனை கல்வி வலைய தமிழ் பாடத்துக்கான (ஏ.டி.ஈ) கலாநிதி சத்தார் எம்.பிர்தௌஸ், மருதமுனை அல் மனார் மத்திய கல்லூரியின் அதிபர் பி.எம்.எம்.பதுறுதீன், SEIPAM நிறுவனத்தில் முகாமையாளர் எம்.ஏ.முகம்மட் அஸ்பீல், கல்முனை ஆதார வைத்தியசாலையின் வைத்தியர், வைத்திய கலாநிதி மஷாஹிட், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வைத்தியர், வைத்திய கலாநிதி ஏ.ஏ.எம்.புஹஐம், லயன் கே.றிஸ்வி யாசீர், CIC நிறுவனத்தின் பிராந்திய முகாமையாளர் எம்.வி.அப்துல் பஉக் ஆகியோர் கௌரவ அதிதிகளாக பங்குகொண்டிருந்தார்.

பார்வையாளர்களால் மண்டபம் நிறைந்திருந்த நிகழ்வின் இணைப்பாளராக தென்கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர் எம்.எச்.அல் இஹ்ஷான் செயற்பட்டதுடன் எம்.எஸ்.எம்.சப்ரீன் நிகழ்வுகளை தொகுத்து வழங்கினார்.

நிகழ்வின் இறுதியில் மாணவ மணிகளுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.













எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -