ஏ.எச்.எம். நிறாஸ்-
ஏறாவூர் பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் இளைஞர் விவகார குழு எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய அனர்த்தங்களின் போது தொண்டர்களாக கடமையாற்ற விருப்பமுள்ளவர்களுக்கான ஒன்றுகூடலொன்றை நேற்று வெள்ளிக்கிழமை (01/12/2017) இஷா தொழுகையின் பின்னர் ஜாமிஉல் அக்பர் ஜும்மா மஸ்ஜிதில் ஏறாவூர் பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத் தலைவர் அஷ்ஷேஹ் வாஜித் மௌலவி அவர்களின் வழிகாட்டலில் இளைஞர் விவகார குழு தலைவர் பொறியியலாளர் றஸ்வி அவர்களின் தலமையில் இடம்பெற்றது.இதன்போது இயற்கை அனர்த்தங்கள் மற்றும் செயற்கை அனர்தங்கள் இடம்பெறுகின்றபோது எவ்வாறு
இவ் அனர்தகுழு செயற்பட வேண்டும் என்பனவற்றி விரிவான விளக்கம் பொறியாளர் றஸ்வியினால் வழங்கப்பட்டது.
அது மாத்திரமன்றி கடந்தகாலங்களில் அனர்த்தங்கள் ஏற்பட்டபோது இவ்வாறான ஒரு குழு இல்லாததால் பல சிரமங்கள் ஏற்பட்டதை கவனத்தில் கொண்டு பலருடைய ஆலோசனையின் பேரில் இக்குழுவின் அவசியம் உணரப்பட்டதால் தற்போது இக்குழு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் அனர்த்த முகாமைத்துவ குழுவில் அங்கம் வகிக்கும் சகல உறுப்பினர்களுக்குமான அனர்த்தம் தொடர்பான பயிற்சிநெறி ஒன்றை அடுத்தவாரம் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் அனர்த்த பிரிவின் ஊடாக நடாத்துவதற்கு ஏறாவூர் பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் ஏற்பாடுகளை செய்து வருகிறது.
இவ்வொன்றுகூடலில் ஏறாவூர் பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன தலைவர் , உப தலைவர்கள், நிருவாக உறுப்பினர்கள் மற்றும் சமூகத்தொண்டர்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள்.


