அப்துல்சலாம் யாசீம்-
திருகோணலை நகர்ப்பகுதியில் கேரளா கஞ்சாவை தம் வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் வெவ்வேறு இடங்களில் இரண்டு பேர் இன்று (25) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
திருகோணமலை மரத்தடி சின்னத்தோட்டம் பகுதியில் கேரளா கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து சுற்றிவளைப்பை முன்னெடுத்த திருகோணமலை பிராந்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் 30 கேரளா கஞ்சா பெக்கட்டுக்களுடன் அதே இடத்தைச்சேர்ந்த ரவீந்திரன் இந்ரஐித் (39வயது) கைது செய்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை சர்தாபுர விஷேட பொலிஸ் அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து சுற்றிவளைப்பை மேற்கொண்ட போது 817கிரேம் கேரளா கஞ்சா கைப்பற்றறப்பட்டதாகவும் தெரியவருகின்றது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் திருகோணமலை.அன்புவழிபுரம் பகுதியைச்சேர்ந்த கார்த்திகேசு விதிநாதன் (24வயது) எனவும் தெரியவருகின்றது.
கைது செய்யப்பட்ட இரண்டு பேரையும் திருகோணமலை நீதவான் முன்னிலையில் ஆஐர்படுத்தவுள்ளதாகவும் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
