மு.இராமச்சந்திரன்-
சட்டவிரோதமாக வைத்தியர் அனுமதியின்றி போதை மாத்திரை விற்பனை செய்த மருந்தகமொன்று( பாமஷி )தலவாக்கலை நகரில் சுற்றிளைக்கப்பட்டுள்ளது.
11.11.2017 மாலை தலவாக்கலை அதிரடிபடையினரும் நுவரெலியா உணவு ஔடத பரிசோதர்களும் மேற்படி சுற்றிவளைப்பில் ஈடுபட்டுள்ளனர்.
வைத்தியர் அனுமதியின்றி சட்ட விரோதமாக போதை மாத்திரைகள் விற்றனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலையடுத்தே சுற்றிவளைப்பு மேற்கொள்பட்டுள்ளது.
விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 150 மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பவரை பினை
யில் விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன் வழக்கு பதிவு செய்து நுவரெலியா மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


