தேர்தல் சர்ச்சைக்குப் பயந்து நான் மோல்டாவுக்கு ஓடவில்லை- அமைச்சர் பைசர் முஸ்தபா

ள்ளூராட்சித் தேர்தலை நடத்துவது குறித்து எழுந்துள்ள சர்ச்சைக்கு பயந்து நான் மோல்டாவுக்கு ஓடவில்லை என்று உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெண்கள் மற்றும் சிறுவர் நடவடிக்கைகள், சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி மற்றும் கண்டி மரபுரிமைகள் தொடர்பிலான அமைச்சுக்களின் நிதி ஒதுக்கீடு குறித்து நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார்.

“உள்ளூராட்சித் தேர்தல் வர்தமானி தொடர்பில் மேல்முறையீட்டு நிதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் பின்புலத்தில் சுதந்திரக் கட்சியில்லை. அதற்கு அஞ்சிதான் நான் மோல்டாவுக்குச் சென்றதாகவும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. நான் எதற்கு பயந்து மோல்டாவுக்கு ஓடவில்லை. உள்ளூராட்சித் சபைகள் குறித்து நடைபெற்ற மாநாடொன்றில் கலந்துகொள்வதற்காக நாட்டின் தலைவர் ஜனாதிபதியின் அனுமதி மற்றும் அமைச்சரவைக்கு காரணங்களைச் சமர்ப்பித்துவிட்டே மோல்டாவுக்கு சென்றேன்.

நான் சட்டத்தரணி எனக்கெதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது. நான் எனது பதவியை கேலிக்குட்படுத்தமாட்டேன். எனது ஜனாதிபதி சட்டத்தரணி பதவி பெறுமதிமிக்கதாகும். ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கே செயற்பட்டேன். நாட்டிற்கும் அரசியல் கட்சிக்கும் நீதியை நிறைவேற்றுவேன். சிறுபான்மைக் கட்சிகள் முதல் அனைத்து தரப்பினரதும் கருத்துகளை உள்வாங்கியே உள்ள+ராட்சித் தேர்தல் திருத்தச்சட்டம் நிறைவேற்றப்பட்டிருந்தது. வர்த்தமானி அறிவிப்பு தயாரிக்கப்பட்ட போது அது தொடர்பாக அனைத்து கட்சிக்கும் தெளிவுபடுத்தினேன்.

வர்த்தமானியில் குறைபாடுகள் இல்லை. பொறுப்புடன் நான் இதை கூறுகின்றேன். இடைக்கால உத்தரவே தற்பொழுது வழங்கப்பட்டுள்ளது. சுயாதீனமாக இயங்கும் நீதித்துறையின் உத்தரவை ஜனநாயக முறைப்படி ஏற்றுக்கொள்ள வேண்டும.; இதன் பின்புலத்தில் நாங்கள் இல்லை என்பதை திட்டவட்டமாக தெரிவிக்கின்றேன்.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -