கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு திருகோணமலை பிரதான வீதி உப்பாறு பாலத்துக்கு கீழ் சட்டரீதியான அனுமதிப் பத்திரம் இருந்தும் சட்ட நிபந்தனையை மீறிய குற்றச் சாட்டின் பேரில் மண் அகழ்வில் ஈடுபட்ட நான்குபேரை நான்கு மண் டெக்டர் இயந்திரங்களுடன் நேற்றிரவு(11) கைது செய்யப்பட்டுள்ளதாக திருகோணமலை பிராந்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி எஸ்.ஐ.ஜனோசன் தெரிவித்தார்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து நான்கு பேர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கைது செய்யப்பட்டவர்கள் கிண்ணியா பொலிஸில் மண் டெக்டர் இயந்திரங்களுடன் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் திருகோணமலை பிராந்திய போதைப் பொருள் தடுப்பிப் பிரிவினர் தெரிவித்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் சுல்தான் மொஹமட் லதீப் காக்காமுனை -06,மஹம்மது பாரூக் முகம்மது சபீக் இடிமன்-06 கிண்ணியா,முஹம்மது ஜின்னா முஹமட் மஹ்ரூப் நகர் கிண்ணியா,மெய்யதீன் நௌசாத் மஹமாரு கிண்ணியா போன்றோர்களாவர் .
EP RD 5972,EP RB 3753,EP RB 3801,EP RE 9247 எனும் இலக்கத்தகட்டையுடைய நான்கு டெக்டர் இயந்திரங்களையும் கைப்பற்றியுள்ளதாக மேலும் தெரிவித்தனர்.இச் சுற்றிவலைப்பில் ஈடுபட்ட எஸ் ஐ ஜனோசன் தலைமையிலான குழுவினர்களான அதுகோரள 12793,தௌபீக் 53776,இந்திக 61836, வன்னி நாயக்க 79126, ராஜமுனி 31052 போன்ற இலக்கத்தையுடைய குழுவினரின் முயற்சியுடனேயே கைதுகள் இடம்பெற்றதாகவும் எஸ்.ஐ.ஜனோசன் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டவர்கள் நான்கு பேரும் திருகோணமலை நீதிமன்ற நீதவான் முன்னிலையில் திங்கட்கிழமை ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.
