மாற்றிவிட்டால் எல்லம் சரி என நினைக்கின்றார்கள் அனால் மாற்றம் ஏற்படும் போதெல்லாம் ஏமாற்றமே மிஞ்சுகின்றது மலையகசமுகம் கல்விச்சமூகமாக மாற்றம் கண்டு வருகின்றது இது இன்னும் உயர்வடைய வேண்டும் என மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சர் மருதபாண்டி ராமேஸ்வரன் தெரிவித்தார்
அட்டன் கார்பெக்ஸ் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வில் அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்
கல்லூரியின் அதிபர் வீ உதயகுமார் தலைமையில் 11.11.2017 கல்லூரியின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்ற இந் நிகழ்வில் மத்திய மாகாணசபை உறுப்பினர் கணபதி கணகராஜ் அட்டன் வலயக்கல்விப்பணிப்பாளர் எஸ்.சிரிதரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்
இந் நிகழ்வில் தொடர்ந்து அவர் உ ரையாற்றுகையில்
கார்பெக்ஸ் தமிழ் மகா வித்தியாலயம் இன்று கல்லூரியாக தரம் உயர்வு பெற்றுள்தையிட்டு மகிழ்சியடைகின்றேன் தொடர்ந்தும் இந்த கல்லூரி உயவடைய வேண்டும் என வாழ்த்துகிறேன்.
மலையக பெருந்தோட்ட பிள்ளைகளின் நலன் கருதி அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் தூர நோக்கு சிந்தனையில் உறுவாகிய ஸ்ரீ பாத தேசிய கல்வியியற் கல்லூரியானது தற்போது மூன்றுபாடங்கள் கட்டாய சித்தி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுகின்றது கடந்த காலங்களில் இரண்டு பாடங்களே சித்தி பெற்றிருக்க வேண்டும் என்ற நிலை இருந்தது இவ்வாறு எமது சிறுபன்மை சமூகத்தின் உரிமைகள் இல்லாதொழிக்கப்பட்டு வருகின்றது அதே போல மலையகத்தில் தேசிய பாடசலைகள் அமைக்கவேண்டும் என கோரிக்கை விடப்படுகின்றது.
அவ்வாறு அமையும் போது அதற்கான வளங்களை மத்திய அரசாங்கத்திடமிருந்தே பெற்றுகொள்ள வேண்டும் அது சாத்தியமாகுமா. அன்மையில் கல்வி இராஜாங்க அமைச்சர் கருத்து தெரிவிக்கையில் கல்வி இராஜாங்க அமைச்சிற்கு எவ்வித பொருப்புகளும் வழங்கவில்லை அனைத்து விடங்களும் கல்வி அமைச்சினூடாகவே முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்திருந்தார் இவ்வாறான நிலையில் மத்திய அரசாங்கத்தின் இயங்கும் தேசிய பாடசலைகளின் வழங்களை எவ்வாறு பெற்றுகொள்ள முடியும் அதே போல.
மத்திய மகாண அமைச்சில் எத்தனை அமைச்சுக்களில் தமிழ் மொழி அதிகாரிகள் இருக்கின்றார்கள் எத்தனை திணைக்களங்ளில் தமிழ் அதிகாரிகள் இருக்கின்றார்கள் இந் நிலை மாற வேண்டும் ஆகவே மாணவர்களின் பெறுபேருகளை அதிகரிக்க பாடசாலை அதிபர்கள் ஆசிரியகள் அதிக அக்கரை காட்ட வேண்டிய அதே சந்தர்ப்பத்தில் உங்களின் கல்வி தரத்தையும் உயர்த்திக்கொள்ள வேண்டும் அவ்வாறான சந்தர்ப்பங்களிலே தமிழ் அதிகாரிகளை அமைச்சுகளிலும் திணைக்களங்களிலும் இணைத்துகொள்ள வாய்ப்புகள் ஏற்படும் என்றார்
மேலும் மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சினூடாக பாடசாலைகளுக்கு வளங்களை தர நான் தயாராக உள்ளேன் அது போலவே உங்களிடமிருந்து சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களை எமது சமூகத்திற்கு தாருங்கள் அப்போதுதான் எமது சமூகம் ஏனைய சமூகத்தோடு சம அந்தஸ்துடன் வாழ முடியும் என்றார்.
மேலும் மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சினூடாக பாடசாலைகளுக்கு வளங்களை தர நான் தயாராக உள்ளேன் அது போலவே உங்களிடமிருந்து சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களை எமது சமூகத்திற்கு தாருங்கள் அப்போதுதான் எமது சமூகம் ஏனைய சமூகத்தோடு சம அந்தஸ்துடன் வாழ முடியும் என்றார்.