மு.இராமச்சந்திரன்,க.கிஷாந்தன்-
அனுமதிபத்திரமின்றி சட்டவிரோதமாக வெளிநாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட சிகரெட் ஒருத்தொகையை வைத்திருந்த பலசரக்கு கடையினை தலவாக்கலை பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர்.
தலவாக்லை நகரிலுள்ள பலசரக்கு கடையொன்றை 17.11.2017 மதியம் சுற்றிவளைத்து சோதனையிட்ட போதே 200 வெளிநாட்டு சிகரெட்டுகள் மீட்கப்பட்டுள்ளது .
இலங்கையில் அனுமதிபெற்று விற்பனை செய்யப்படும் சிகரெட்டுகளுடன் கலந்தே மேற்படி சிகரெட் விற்பனை செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
சந்தே நபரை பொலிஸ் பினையில் விடுதலை செய்யதுள்ளதுடன் வழக்கு பதிவு செய்து நுவரெலியா மாவட் ட நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக தலவாக்கலை பொலிஸ் நிலைய பொருப்பதிகாரி ரசிக்க வத்தேகம தெரிவித்தார்.

