கிந்தொட்டயில் தாக்குதல் மேற்கொண்டவர்கள் வெளிப் பகுதியிலிருந்து வந்தவர்கள்- பொலிஸ்

கிந்தொட்ட பிரதேசத்திற்கு வெளிப் பிரதேசத்திலிருந்து வருகை தந்த கும்பலொன்று இன்று (17) இரவு அங்கிருந்த கடைகள் மற்றும் வீடுகள் என்பவற்றின் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தாக்குதல் நடாத்த வந்தவர்கள் முகத்தை மூடிய நிலையில் காணப்பட்டதாக கிராம மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

சற்று நேரத்துக்கு முன்னர் கிந்தொட்ட பிரதேசத்தில் வெடிச் சத்தமொன்று கேட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தேவைப்படின் அசாதாரண முறையில் அதிகாரத்தைப் பயன்படுத்தியாவது கலகம் ஏற்படுத்துபவர்களை கட்டுப்படுத்துமாறு பொலிஸ் மா அதிபர் பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

பொலிஸ் பாதுகாப்பு தொடர்ந்தும் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சற்று நேரத்துக்கு முன்னர் விசேட பொலிஸ் படைப் பிரிவுக்கு மேலதிகமாக படையணியொன்று வரவழைக்கப்பட்டுள்ளதாகவும் சகோதர தேசிய சிங்கள ஊடகமொன்று அறிவித்து்ளளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -