மழையில் நனைந்து வெளியில் போராடும் மிகுதி பட்டதாரிகளுக்கும் நியமனம் வழங்க வேண்டும்

ஹஸ்பர் ஏ ஹலீம்-
வெளியில் மழையில் நனைந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபடும் பட்டதாரிகளுக்கும் ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்படவேண்டும் .நான் இதனை மன வேதனையுடன் கூறுகின்றேன் மழையில் நனைந்து போராடும் பட்டதாரிகள் நாளை வைத்தியசாலைக்கு செல்லலாம் காலம் தாழ்த்தாது அவர்களுக்கான நியமனங்களை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கிழக்கு ஆளுனரை கேட்டுக்கொள்கின்றேன்.

 என நேற்று(25) திருகோணமலை ஏகம்பரம் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற கிழக்கு பட்டதாரிகளுக்கான ஆசிரியர் நியமனம் வழங்கும் வைபவத்தில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத்தலைவருமான அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்தார்.

 40 புள்ளிகளைப் பெற்றும் மற்றும் நேர்முகப்பரீட்சைக்கு அழைப்பு விடுத்தும் தங்களுக்கான நியமனம் வழங்காமை குறித்து நியமனம் வழங்கும் வைபவத்தில் மைதானத்துக்கு வெளியில் மிகுதி பட்டதாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதைக் கண்டபோதே நியமனம் வழங்கும் வைபவத்தில் தனது உரையின்போது பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் 35 தொடக்கம் 45 வயது வரையான கிழக்கு மாகாண பட்டதாரிகளும் வேலைவிய்ப்பின்றி இருக்கிறார்கள் இவர்களுக்கான நியமனத்தை எந்தவிதமான பரீட்சைகளும் இன்றி பயிற்சிகளை கொடுத்து அரச நியமனங்களை வழங்குவதற்கு நாட்டின் ஜனாதிபதி பிரதமருடன்பேசி நடவடிக்கைகளை ஆளுனர் மேற்கொள்ளவேண்டுமெனவும் வருகின்ற வருடம் நியமனங்களை வழங்குவதற்கான துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் ஆளுனரையும் விழித்து இதன்போது தெரிவித்தார்.

445 தொண்டர் ஆசிரியர்களுக்கான நியமனங்களை வழங்குவதற்கான அனுமதியினை பெற்று இருவருடங்கள் கடந்தபோதிலும் அந்த நியமனங்களும் இழுபறி நிலையில் உள்ளது இவ்வாறான தொண்டர் ஆசிரியர் நியமனங்களையும் டிசம்பர் மாதத்துக்குள் வழங்குவதற்கான நடவடிக்கைகளை மாகாண கல்வியமைச்சின் செயலாளர்,கிழக்கு பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் கிழக்கு ஆளுனருடன் சேர்ந்து நியமனங்கள் வழங்குவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவேண்டும்.

98 கல்வி வலயங்கள் காணப்படுகிறது குறிப்பாக திருகோணமலை வடக்கு,கிண்ணியா,மூதூர்,குச்சவெளி,கந்தளாய் போன்ற ஐந்து வலயங்களும் திருகோணமலை மாவட்டத்தில் கல்வியில் எந்தவித பின்னடைவுகளும் இன்றி ஆளுனர் விட்டுச்செல்கின்றபோது குறைகள் இல்லாமல் இருக்கவேண்டும் எனவும் திருமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -