ரிஹான், ரிபாய்-
கடந்த 24.11.2017 வெள்ளிக்கிழமை அன்று ஏறாவூர் பள்ளியடி வீதியில் உள்ள
திருமண நிகழ்வு ஒன்றின் போது
விருந்துபசாரத்தில் கலந்துகொண்டவர்களில் 32பேர் வயிற்று வலி மற்றும் வாந்தி காரணமாக ஞாயிற்று கிழமை இன்று
காலை 7.30 ல் இருந்து ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக ஏறாவூர் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி D.R.பழில் கருத்து தெரிவிக்கையில்:
திருமண வீட்டில் உட் கொண்ட உணவின் ஒவ்வாமையே இதற்க்கு காரணம்
என்றும் அனுமதிக்கப்பட்டவர்கள் தற்போது வீடு செல்லும் நிலமைக்கு திரும்பி உள்ளதாகவும் தெரிவித்தார்.


