பி.கேதீஸ்-
கிராமிய உட்கட்டமைப்பு அபிவிருத்தி வேலைத்திட்டதின் கீழ் கொத்மலை பிரதேசத்தில் சுய தொழிலில் ஈடுபட்டு வருவோரை ஊக்குவிக்கும் முகமாக அவர்களுக்கு தேவையான மூலதன உள்ளீட்டு உபகரணங்களை வழங்கி வைக்கும் நிகழ்வு கொத்மலை பிரதேச செயலகத்தின் கேட்போர் கூடத்தில் 16.10.2017 இடம் பெற்றது. இந்நிகழ்வில் மத்திய மாகாண விவசாய,இந்து கலாசார,தமிழ் கல்வி அமைச்சர் மருதபாண்டி ராமேஸ்வரன் அவர்களுடன் மத்திய மாகாண சபை உறுப்பினர் குமார தசாநாயக்க மற்றும் கொத்மலை பிரதேச செயலாளர் ,உத்தியோகத்தர்கள் மற்றும் கலந்துக்கொண்ட பயனாளிகளின் ஒரு பகுதியினரையும் இங்கு காணலாம்.

