பாராளுமன்ற உறுப்பினர் செய்யித் அலி ஸாஹிர் மௌலானா அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் மட்/ ஜெயந்தியா அஹமட் ஹிராஸ் வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட சிறுவர் முற்றம் திறப்பு விழா நிகழ்வும் சர்வதேச சிறுவர் தின நிகழ்வும் (04.10) அன்று நடைபெற்றது.
பாடசாலை அதிபர் எம்.ஐ.செய்னுலாப்தீன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் செய்யித் அலி ஸாஹிர் மௌலானா அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறுவர் முற்றத்தை திறந்துவைத்தார். இந் நிகழ்வின்போது மட்டக்களப்பு மத்தி வலயக்கல்விப்பணிப்பாளர் ஏ.எஸ்.இஸ்ஸதீன் மற்றும் கோறளைப்பற்று மேற்கு கோட்டக்கல்;வி அதிகாரி எம்.எல்.ஜுனைட் உட்பட பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.