ஹஜ்ஜுப்பெருநாளில் மியன்மார் முஸ்லீம்களுக்கு விடிவு கிடைக்கட்டும்-டாக்டர் நக்பர்

பைஷல் இஸ்மாயில் –

மியன்மாரில் சித்திரவதைக்குள்ளாகி படுகொலை செய்யப்படுகின்ற ரோஹிங்கிய முஸ்லிலிம்களுக்கும், சிரியாவிலும், பலஸ்தீனிலும் ஏனைய அரபுலக நாடுகளிலும் பல இன்னல்படுகின்ற முஸ்லிம்களுக்கும் விடிவு கிட்டவேண்டுமென ஈதுல் அழ்ஹா தியாகத் திருநாள் தினத்தில் இலங்கை முஸ்லிம்களாகிய நாம் அனைவரும் பிராத்திக்க கடமைப்பட்டிருப்பதாக அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்கரும், நிந்தவுர் ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையின் பணிப்பாளருமாகிய வைத்திய கலாநிதி கே.எல்.எம்.நக்பர் விடுத்துள்ள ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்கரும், நிந்தவுர் ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையின் பணிப்பாளருமாகிய வைத்திய கலாநிதி கே.எல்.எம்.நக்பர் விடுத்துள்ள ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கையில்,

இப்ராஹிம் நபி அவர்கள் அல்லாஹ்வுக்காக செய்த தியாகத்தை நினைவு கூறும் இந்நாளில் நாம் எமது சகோதர முஸ்லிங்களுக்காக எமது சிறிதளவு நேரத்தை தியாகம் செய்து அவர்களுக்காக எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் இரு கரமேந்திப் பிரார்த்திப்போம்.

எம் சமூகத்திற்கு எதிராக கொண்டுவரும் அடக்குமுறைகளுக்கும் அநீதிகளுக்கும் விளைவிக்கப்படுகின்றபோது முஸ்லிங்கள் அனைவரும் ஒன்றிணைய முன்வர வேண்டும்.

அத்துடன் மனிதாபிமானத்தை மையப்படுத்தி சிறுபான்மையினரால் உருவாக்கப்பட்ட நல்லாட்சி அரசாங்கமும் பகிரங்கமாக மியன்மாரின் நடவடிக்கைகளை கண்டிக்க வேண்டும்.

எனவே இன்றைய தினம் தியாகத் திருநாளை கொண்டாடும் அனைத்து முஸ்லிங்களுக்கும் இனிய ஹஜ் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகின்றேன் என்றும் அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்கரும், நிந்தவுர் ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையின் பணிப்பாளருமாகிய வைத்திய கலாநிதி கே.எல்.எம்.நக்பர் தெரிவித்துள்ளார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -