மட்டக்களப்பு மத்தி வலயக் கல்வி அலுவலகத்துக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டின் நிதியொதுக்கீட்டில் இருந்து கணணி உபகரணம் மற்றும் அலுமாரிகள் போன்றன கல்விப் பணிப்பாளர் ஏ.எஸ்.இஸ்ஸத்தின் அவர்களிடம் கையளிக்கப்பட்டன.
அத்துடன் ஏறாவூர் ஜிப்ரியா வித்தியாலயத்துக்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் அவர்களின் கோரிக்கையுடன் முதலமைச்சரின் நிதியொதுக்கீட்டில் மாணவர்களுக்கான தளபாடங்கள் வழங்கிவைக்கப்பட்டன.
பல இலட்சம் ரூபா பெறுமதியான தளபாடங்கள் இதன் போது வழங்கி வைக்கப்பட்டன,
இந்நிகழ்வில் முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் மற்றும் உறுப்பினர் ஷிப்லி பாறூக் அவர்களுடன் கல்வி அதிகாரிகள் அதிபர் ஆசிரியர்கள் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.