நிகழ்வுகளுக்காக ஸகன் சாப்பாடுகளை சமைப்பவர்கள் விடயத்தில் விழிப்புணர்வு அவசியம்.

மக்கள் நண்பன் - சம்மாந்துறை அன்சார்-

ன்றொரு காலமிருந்தது நமது வீடுகளில் நடைபெறும் எந்த நிகழ்வாகவிருந்தாலும் கத்னா வைபவமாகவிருந்தாலும், திருமண வைபவமாகவிருந்தாலும், புதுமனை புகு நிகழ்வாகவிருந்தாலும், சங்கத்துக் கூட்டங்களாகவிருந்தாலும், வலீமா வைபவமாகவிருந்தாலும் அந்த நிகழ்வுகளுக்கு நமது தாய்-சகோதரி-உற்றார் உறவினர் என அத்தனைபேருமே அவர்களது கைப்பட உணவு சமைப்பார்கள்.

ஒருவர் தேய்காய் துருவிக் கொண்டிருப்பார், இன்னுமொருவர் அடுப்பைப் பற்ற வைத்துக் கொண்டிருப்பார், இன்னுமொருவர் சோறு சமைத்துப் கொண்டிருப்பார் இப்படி ஆளுக்கொரு வேலையை இழுத்துப் போட்டு செய்து கொண்டிருப்பர் அதனை பார்ப்பதற்கே ஆனந்தமாகவிருக்கும். இப்போது அந்தக் கலாச்சாரம் அழிந்து போய் ஸகன் சாப்பாடு என்ற புதிய கலாச்சாரம் உருவாகியுள்ளது இந்தக் ஸகன் சாப்பாட்டுச் கலாச்சாரத்தில் வெறும் சுவையற்ற உணவுகள் இருக்குமே தவிர உணர்வுகள் இருப்பதில்லை, மகிழ்ச்சிகள் இருப்பதில்லை.

இன்று நமது வீடுகளில் நடைபெறும் எந்த நிகழ்வாகவிருந்தாலும் ஒரு 5 பேருக்கு சாப்பாடு கொடுப்பதாகவிருந்தாலும் ஸகன் சாப்பாடுகளுக்குத்தான் ஓடர் கொடுக்கின்றார்கள் உற்றார் உறவினர் எல்லோரும் சேர்ந்து சமைத்துப் பரிமாறும் பழக்கம் அடியோடு அழிந்து விட்டது.

இன்றைய வேலைப்பழு மிகுந்த காலப்பகுதியில் நமது வீடுகளில் நடைபெறும் நிகழ்வுகளுக்காக ஸகன் சாப்பாடுகளுக்கு ஓடர் கொடுத்துப் பெற்றுக் கொள்வது நன்மை பயப்பதாகவிருக்கலாம் இதன் மூலமாக நேரத்தை மிச்சம் படுத்தலாம், வேலைப்பழுவைக் குறைக்கலாம், செலவினத்தையும் குறைக்கலாம் இப்படி பல நன்மைகள் ஸகன் சாப்பாடுகளைப் பெற்றுக் கொள்வதனால் கிடைக்கப் பெற்றாலும் இதனால் ஏற்படும் பாதிப்புக்களையும் மறந்து விடக் கூடாது.

இன்று ஸகன் சாப்பாட்டு சேர்விஸ்களை பல ஊர்களில் பலபேர் செய்து கொண்டிருக்கின்றார்கள் ஸகன் சாப்பாடுகளை இலவச டெலிவரிகளும் செய்து தருகின்றார்கள் ஆனால் இவர்களின் உணவுகளில் சுத்தம்-சுகாதாரம் இருப்பதில்லை, ஆரோக்கிய சமையல் முறைமை இருப்பதில்லை, சமையலுக்கான சரியான மூலப் பொருட்கள் பயண்படுத்துவதில்லை, இவர்கள் காலாவதியான பொருட்களைக் கூட சமையலுக்குப் பயண்படுத்தலாம் ஒரு சிலர் இதற்கு விதிவிலக்காகவிருந்தாலும் நிறையப் பேர் வெறும் பணத்தை மாத்திரம் அடிப்படையாகக் கொண்ட சமையல்களைத்தான் தருகின்றார்கள்.

இவர்கள் விடயத்தில் ஸகன் சாப்பாடுகளுக்கு ஓடர் கொடுக்கும் நீங்களும், சுகாதாரப் பரிசோதகர்களும் பின்வரும் விடயங்களில் கவனமாகவும் விழிப்பாகவும் இருக்க வேண்டும்.

01. இவர்கள் சமையலுக்கான சுகாதாரப் பரீசோதகர்களிடம் முறையான அனுமதி பெற்றிருக்க வேண்டும்.

02. சரியான காலாவதியாகாத சமையல் மூலப் பொருட்களை கொண்டுதான் உணவு தயாரிக்கின்றார்களா என்று கவனித்துக் கொள்ள வேண்டும்.

03. இவர்கள் உணவு தயாரிக்கும் இடம் சுத்தமாக இருக்கின்றதா என்பதை அவதானித்துக் கொள்ள வேண்டும்.

04. இவர்களது சமையல் முறைமைப் பற்றியும் இவர்களது ஆரோக்கியமான விடயங்கள் பற்றியும் நன்றாகத் அவதானிக்கப்பட வேண்டும்.

05. சிலர் அரைவாசி வெந்தும் வேகாமலும் உணவுகளை சமைக்கின்றனர் இவர்கள் விடயத்தில் அவதானம் வேண்டும்.


06. இவர்கள் உணவுகளைப் பரிமாறும் பாத்திரங்களை சுத்தமாக கழுவுகின்றார்களா என்பதை பார்க்க வேண்டும்.

07. சிலர் சமைக்கும் போது வியர்வையோடு நின்று சமைத்துக் கொண்டிருப்பார்கள், சிலர் சமையலுக்கான உடைகள் எதுவும் அணியாமல் வெறும் மேனியோடு நின்று சமைப்பார்கள் இவர்களையும் அவதானிக்க வேண்டும்.

08. உங்கள் சாப்பாடுகளுக்காக ஓடர்களை மாத்திரம் கொடுத்து விட்டு வராமல் அவர்களிடம் நீங்கள் சமையலுக்காக என்னென்ன பொருட்கள் பாவிக்கின்றீர்கள் என்பதை கேட்டு அறிந்து கொள்ளுங்கள்.

09. இவர்கள் தங்களது உணவுத் தயாரிப்புக்காக தரச்சான்றிதல் பெற்றிருக்க வேண்டும்.

10. நமது நிகழ்வுகளுக்காக உரிய நேரத்தில் உணவுகளைப் டெலிவரி செய்கின்றார்களா என்பதையும் அவதானிக்க வேண்டும்.

கந்துாரிச்சாப்பாடு, ஸகன் சாப்பாடுகளில் சுத்தம்-சுகாதாரம் பேணப்படாமல் இருப்பதனாலும் அதனை உட்கொண்டு பல விபரீத சம்பவங்கள், அசம்பாவீதங்கள் பல நிகழ்வுகளில் இடம்பெற்றதை நான் யாவரும் மறந்து விடக் கூடாது.

ஆகவே சகோதரர்களே, நண்பர்களே...நீங்கள் உங்கள் வீட்டு நிகழ்வுகளுக்கு ஸகன் சாப்பாடுகளுக்கு ஓடர் கொடுக்கும் போது அவர்களது சுத்தம்-சுகாதாரம் விடயத்தில் மிக அவதானமாகவிருக்க வேண்டும். முறையற்ற முறையில் உணவுகளை சமைப்பவர்களைப் பற்றி உடனடியாக முறையிட்டு அவர்களுக்கெதிராக நடவடிக்கை எடுத்து அவர்களை தொழிலுக்கு சீல் வைக்க வேண்டும்.

“ஸகன் சாப்பாடுகளை விட நமது கைப்பட சமைத்துப் பரிமாறுவதே எல்லாவற்றிலும் மேலானதாகும்”
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -