ஹஸ்பர் ஏ ஹலீம்-
முழு மனித குலமும் வெட்கி தலை குனியும் வண்ணம் மியன்மார் அரக்கான் மாநிலத்தில் ரோக்கியங்க முஸ்லிம்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை தடுத்து நிறுத்த உடன் நடவடிக்கை எடுக்குமாறு கிண்ணியா உலமா சபை ,சூரா சபை என்பவற்றினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது ......
இன்று (30)கிண்ணியா நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன உடனான சந்திப்பின் போதே இக்கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது .......
இவ் கலந்துரையாடலில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான அப்துல்லா மஹ்ரூப்,இம்ரான் மஹ்ரூப் ,கிழக்கு மாகாண சபை உறுப்பினர் டொக்டர் அருண சிறிசேன உட்பட மூதூர் கிண்ணியா பிரதேச செயலாளர்கள் கடற்படை உயரதிகாரிகள் பொதுமக்கள் எனப்பலரும் பங்கேற்றனர்.